Now Online

Wednesday, 31 October 2018

தோழி


கைக்கெட்டும் தூரத்தில்  கண்ணயர்ந்து தூங்குகிறாய் என்மீதுள்ள நம்பிக்கையால்  காற்றில் கலைந்த உன் சால்வையை சரிசெய்யும் என் கண்களில் காமம் இல்லை.        மழையில் நனைந்து மண்சாலையை கைக்கோர்த்து நடக்கும் உன் உடல் மொழியில் எனக்கு காதல் துளிர்த்ததில்லை துவளும் வேளையில் தலைகோதி ஆறுதல் சொல்கையில் என் தாயாக                  முகம் பார்த்தே என் மனம் படிக்கையில் சகோதரியாக தோள்பட்டை பிடித்து சமாதானம் செய்கையில் தோழனாக இருக்கும் நீ என் உடன்பிறந்தாள் இல்லை என் மடியில் சாய்வதால் காதலியும் இல்லை எந்நேரமும் என்நலம் நினைப்பதால் மனைவியுமில்லை உன் முந்தானை என் சோகம்துடைக்கத்தானே தவிர நான் துயில் கொள்வதற்கு அல்ல..        ஏனெனில் நீ எனது தோழி.                பாரதிகண்டதோழி கண்ணம்மா போல..எனக்கு யாதுமாகி நின்றவள்.  
🌹வத்சலா🌹     

இரும்புப் பெண்மணி

இரும்புப் பெண்மணி
(அக்டோபர், 31 அன்னை இந்திரா நினைவுதினம்)

இந்தியா கண்ட இரும்புப் பெண்மணி,
இந்தியப் பிரதமராம் ஒரே பெண்மணி,
இந்திரா என்ற நேருவின் கண்மணி.
தந்தை வகுத்ததோ ஐந்தாட்டுத் திட்டம்,
மகள் அளித்ததோ இருபதம்சத் திட்டம்,
குறை சொல்ல இருந்தது ஓர் அவசரநிலை, ஆனால்
அதற்கும் வேண்டுமே எதிர்கொள்ளும் தைரியம்.

பாகிஸ்தானையே பதறச்செய்தவர்,
வங்காளதேசத்தைப் புதிதாய்த் தந்தவர்,
பிரிவினைவாதிகளை பின்வாங்கவைத்தவள்,
பிரிக்காமல் இருந்திட உயிரையே தந்தவள்,
பாரதத்தை ஆண்டதோ பதினாறு ஆண்டுகள்,
பரிசாகப் பெற்றதோ பதினாறு குண்டுகள்,
ஆபத்தில் காப்பாற்றவேண்டிய காவலன்,
அடிவயிற்றில் பொழிந்தான் பதினாறு குண்டுகள்.

தேசநலனுக்காய் உயிரையே கொடுத்தவள்,
நம்பிக்கைத் துரோகத்தைக் கண்முன்னே கண்டவள்,
அன்னையே..
நீ சிந்திய இரத்தம், அது இந்திய இரத்தம்
இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காத்திடும் இரத்தம்,
காத்து நிற்போம் கடமையை உணர்ந்து,
காலமெல்லாம் உன் தியாகத்தை நினைத்து.

சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி


அரசு பள்ளிக்கு ஓர் அழைப்பு

பொடிக்கவிதைகள்

   மஞ்சள்நீராட்டு

வானம் சல்லடையாகியது!
கார்முகில்கள்
சமங்கலிப் பெண்களாகின!
இடி அங்கே மேளமாகியது!
மின்னலோ விளக்காகியது!
'சோ' வெனக் கொட்டிய மழையில்
பூமிப் பெண்ணுக்கு
மஞ்சள்நீராட்டு
இனிதே நடந்தது!

************************

     குளிரில் மரங்கள்

பருவமழையில்
மரங்களும்
குளிரில் நடுங்கி
போர்வையாம்
கதிரவனைத் தேடும்!
ஆனால் மழையில்
நனைந்த போர்வையாய்
கதிரவனோ
தான்காய வழியின்றித் தவிக்கும்!

த.ஹேமாவதி
கோளூர்


சிசு

சிசு
*****

உன் பத்து விரல்களும்...
என்னைத் தொட்டுத்தூக்கி யதா...???

உன் உதட்டோர முத்தத்தின் ஈரம் , என் கண்ணங்களில் பட்டதா...???

என் பார்வையில் பட்ட... இரண்டாம் உலகம் நீதானே...???

என்னை
பார்த்த அக்கணமே... எனை சளித்து..,
முகம் சுளித்து..,
அம்மாவையும் பழித்துக்
கடந்தாயே...!!!

உனக்கு...

இரண்டாவது(ம்)
பெண்ணாய் நான் பிறந்தது...
நான் செய்த
தப்பா...???

"அப்பா...!!!"

****************
ச.சந்திரசூட்
31.10.2018


Tuesday, 30 October 2018

கவரி மான்கொட்டு முரசு கொட்டி,
கோடியில் ஒருத்தி உன்னை
கேலிப் பேச்சு சொல்லி,
வேலி போட்டு வைத்தேன்,
பக்கமிருந்து பார்க்க தானே,
வெட்கம் ஏன்?
நீ என் மானே!

நிற்குமோ?
நிலைக்குமோ?
நிரந்தரமில்லா உலகிலே,,,
ஒரு தரம் காதல்
என்றால் உயர்ந்திடுவேன்
மறுதரம் தேவையானால்
மீண்டும்
மண்ணில் பிறந்திடுவேன்!

- பாலா


இறைவா! வறுமைக்கு மறுமை வேண்டாம்,,,,வான் பறக்க கொடிகள் கட்டி வாழும் இந்த பூமியிலே,,,,
நாம் பறக்க, பிறந்து விட்டோம்
பசியும் தந்த கொடுமையிலே,,,,

தேன்கொடுக்கும் சங்கினிலே,ஊண்
காணக் கிடைக்கவில்லை,,,
ஏன் படைத்தாய் இறைவா,,,
நீ, படைத்தும் நடக்கவில்லை,,,!

பூ போன்ற குழந்தையிரண்டு
புரியாத கணவன் இங்கு,,,,
நீ, பார்த்து மறுத்துவிட்டால்,,,
நாங்களெல்லாம் போவதெங்கு,,,,

ஆள் பார்த்து படியளக்கும் ஆண்டவனை உன்னை கேட்க,
நல்ல,
நாள் பார்த்தும்
கிடைக்கவில்லை
நாயகனே கேளாயோ,,,,,

இளம் பருவ வருமையிங்கு இனம் பார்த்து தந்தாயோ,,,,
முதுமையிலும்,
இதுவே என்று மறைந்து நீயும் சென்றாயோ,,,,

கலைமகளே
கால் பிடித்து கதறுகிறேன் கேளாயோ,,,,
என்,
கால் வயிறு நிறைவதற்கு கல்வி ஒன்றை
தாராயோ,,,,

ஏடெடுத்து, படித்திருந்தால்
இந்த நிலை தவழ்ந்திடுமா,,,
என் விதியிங்கு
பாடச் சொல்லி
பகலிரவாய் மகிழ்ந்திடுமா,,,,

வேடிக்கை பார்க்காது வறுமைதனை விரட்டி விடு,,,,
வேண்டும்
நேரம்
உணவுதனை வயிறாற
வழங்கி விடு,,,,

காணிக்கையாய் நான் செய்ய
எனதன்பு இங்கிருக்க,,,,,
படைத்து விட்டு
வாழ வைக்க,,,
உன் உள்ளம்
தான் மறுக்க,,,

அரிதான பிறவிதனை கொடுத்தவன்
நீ,,,
நீ , அறியாத வறுமையில் வாழவைத்தவன்
நீ,,,,

உலகம், தெரியாமல் பிறந்து விட்டேன்
நாயகனே,,,,
ஊண்,
உருக
பாடிவிட்டேன்
காவலனே,,,

இன்னொரு உயிரை என்னைப் போலிங்கு
படைத்து விடாதே,,,
நான்,
படும்பாட்டை மறந்து நீயும,
துணிந்து
விடாதே,,,

இறைவா!
மறந்தும்,,,,
துணிந்து விடாதே!


- பாலா


தங்கபொட்டுக்கள்காலை விடியல்....
சோம்பல்முறிக்கு
                            ம்
மங்கிய ஒளியை
சுமந்து நின்றதென் வீதி
வாசலைப் பார்த்து
விரிந்ததென் விழி
தரைமுழுக்கதங்க
பொட்டுக்கள் சிதறிக்கிடந்தன!!!
சிந்தனை விரித்து
அண்ணாந்து பார்
                         க்க
அழகாய் சிரித்தது
முருங்கை மரம்.!.
இரவு முழுவதும்
இளந்தென்றலின்
சீண்டலுக்கு உன்
சிணுங்கல்களும்...
தீவிர காற்றின்
தீண்டலுக்கு உன்
துவளுதலும் என
நீண்டிருந்த அன்பு போராட்டம்
விடிகின்றவரையி
                            ல்..
முடியாது முடிந்திட!
பொங்கிப்பெருகி
                            ய
உன்வியர்வைத்
துளிகள் தானோ  உதிர்ந்துச்சிதறிய
பழுப்பு இலைகள்                     
தங்கப்பொட்டுக்க
                        ளாய்
தரை முழுவதும்???
வினாஎன்விழியி
                         ல்???
விடையோமழையி
                          ல்....
குளித்த முருங்கை
                          மர
மலர்ந்த அழகில்!!!
🌹வத்சலா🌹


சகுணம்ஆங்கோர் பூனை வழியில் வந்ததைக் கண்டு
சகுணம் சரியில்லையென்று
வீடு திரும்பினார்
வெளியில் சென்றவர்

அந்தோ! அடிபட்டு இறந்ததோ  பூனை

இதில் யாருக்கு சகுணம் சரியில்லை

தி.பத்மாசினி


குழந்தையின் திணறல்யாழிசை கேட்டேன்
என்றாள் அவள்.
இல்லை இது
குழலோசை என்றான் அவன்.
மறுத்தவள் தொடர்ந்து
வீணையின் இசை
இதுவே என வாதிட்டாள்.
ஏற்காத அவனோ
வெள்ளிமணி ஓசை
என்றே அடம்பிடித்தான்.
மாறிமாறி இருவரும் வாதிட
முதன்முதல் தன்
மலர்வாய் திறந்து
அ..ம்..மா..!
என பேசிய அவர்களின் குழந்தையோ தன்குரல் கேட்டு
ஏன்இவ்வாறு பேசுகிறார்கள் எனத் திணறியது.

த.ஹேமாவதி
கோளூர்


குளியல்வானம் இருண்டது
நீரினைப் பொழிந்தது!
பொழிந்து நின்றதும் வானம்
வெளுத்தது.
இடைபட்ட நேரத்தில்
தாவரங்களின் குளியல் நடந்து
முடிந்தது.

த.ஹேமாவதி
கோளூர்


Monday, 29 October 2018

மானம்தமிழர்க்கு உயிரினும் மேலானது மானம்

ஒருபோதும் அதை வைக்க மாட்டான் அடைமானம்

அதை இழந்தால் போகும் தன்மானம்

யாரிடமும் வாங்க மாட்டான் சள்மானம்

கடுமையாக உழைத்து ஈட்டுவான் வருமானம்

தி.பத்மாசினி


திண்ணையின் சுகம் வருமா...!

அழகான குடிசை வீடு
திண்ணைதான்
நான் வசிக்கும்
இடம்..

மழை காலங்களில்
குடிசை வீட்டில்
கூரையில் ஒழுகும் நீர்த்துளி
விழும் அழகை ரசித்தப்படி
வாழ்க்கை நகர்ந்த
தருணம்..

மனதைக்
கொள்ளைக்
கொள்ளும்
அழகு..

திண்ணை
பல கதைகள்
சொல்லும்
எண்ணத்தை
அளவாக்கி
அழகாக்கி
அடக்கத்தை
உண்டாக்கிய
திண்ணை
மட்டும் மாறாமல்
இருந்த காலம்
மற்ற
எல்லாம்
மாறிய கோலம்..

நானும்
திண்ணையை
மறந்த
காலம்
திகட்டாத
அந்தக்காலம்
இனி வருமா
மகிழ்வான
அமைதியை
தருமா
வீடு பெரியதானாலும்
திண்ணையின்
சுகம் வருமா...!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


இறைவனின் திணறல்துள்ளும் கயல்கள்
தமக்கு உவமை வேண்டுமென இறைவனைக் கேட்க உடனே பெண்களின் கண்கள் என்றான் இறைவன்.
சிவந்தரோசாக்கள்
தங்கள் மென்மைக்கு உவமை கேட்டநொடியே இறைவன் சொன்னபதில் குழந்தைகளின் பாதம்!
நூலுக்கு வஞ்சியரின் இடையென்றான்.
சுவைசேர் பாலுக்கு
மழலைகளின் கன்னமென்றான்.
யாழுக்கும் குழலுக்கும் மழலைச்சொல்லென்றான்.!
தித்திக்கும் தேனுக்குப் பாவையின் உதடென்றான்!
மயிலிறகின் மென்மைக்கு மங்கையின் தீண்டலென்றான்.!
விண்முட்டும் மலைகளுக்கு ஆடவரின் திரண்ட தோள்களென்றான்!
முல்லைச்சரத்திற்கு
நெருங்கி அமைந்த
பற்களின் வரிசையென்றான்.
ஒளிசிந்து முழுமதிக்கு பருவப்பெண் முகமென்றான்!
நட்சத்திரக் குவியலுக்கு காதலியின் புன்முறுவலென்றான்!
ஆழ்கடலுக்கு மங்கையரின் மனதென்றான்!
வானத்தின் பொழிவுக்கு வள்ளலே உவமையென்றான்!
வெள்ளிமணி ஓசைக்குக் கன்னியரின் சிரிப்பென்றான்!
இலவம்பஞ்சுக்கோஇளங்குழந்தையின் மேனியென்றான்!
இத்தனையும் சொன்ன இறைவனிடம் இப்போது கேட்டதோ தமிழ்மொழி!
எனக்கென்ன உவமை?கேட்டமொழிக்கு இன்றுவரை விடையில்லை இறைவனிடம்!.
காரணம் தமிழுக்கு
உவமையில்லாத காரணத்தால் அன்றோ
இறைவனே திணறிப் போனான்!

த.ஹேமாவதி
கோளூர்


புரிதல்

அன்னையாக இருந்து பார் அன்பு புரியும்,

அப்பாவாக இருந்து பார் கரிசனம் புரியும்,

ஆசானாக இருந்து பார் கடமை புரியும்,

நண்பனாக இருந்துபார் நட்பு புரியும்,

வாக்காளனாக இருந்து பார் ஏமாற்றம் புரியும்,

நடிகனாக இருந்து பார் போலித்தனம் புரியும்,

கவிஞனாக இருந்துபார் காட்சிகள் புரியும்,

மனிதனாக மாறிப்பார்

மனித நேயம் புரியும்,

உனக்குள் நீ உற்றுப்பார்

நீ யாரென்று புரியும்,

உலகம் உனதென்று புரியும்.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*

Sunday, 28 October 2018

நான் தென்றல்

உன்

பாதமணலும் மணல் சார்ந்த
பகுதியில் தொடங்கி

உன்

இடைவயலும் வயல் சார்ந்த
பகுதியில் பயணித்து

உன்

கொங்கைமலையும் மலை சார்ந்த பகுதியில் இளைப்பாரி

உன்

விழிகடலும் கடல் சார்ந்த
பகுதியில் வாழ்ந்து

உன்

கூந்தல்காடும் காடு சார்ந்த
பகுதியில் முடிகிறேன்

நான் தென்றல்


மௌனம்

இந்த வார்த்தைக்கு பல 

அர்த்தங்கள் உள்ளன.


கேள்வி கேட்கப்படும் 

நேரத்தில் *மௌனம்* சம்மதம்.


நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது *மௌனம்* துன்பம்.


இடையுறாது காரியம் செய்யும்  விடா முயற்சியின் போது *மௌனம்* நம்பிக்கை.


நம் இதயத்தில் அமர்ந்த 

அந்தக் காதலில் *மௌனம்* சித்ரவதை.


நாம் தோல்வி கண்டு 

வெற்றிக்கு வழிதேடும் போது *மௌனம்* பொறுமை.


நாம் வெற்றி கண்டபோது 

நம்மைச் சூழ்ந்திருக்கும் *மௌனம்* அடக்கம்.


திருமணக்கோலத்தில் 

உள்ள அமைதியின் போது *மௌனம்* வெட்கம்.


தவறுதலாக தவறு செய்த போது *மௌனம்* பயம்.


ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது *மௌனம்* எதிர்பார்ப்பு.


கோபத்தை குறைக்காமல் 

அடக்கும் போது *மௌனம்* ரத்தக்கொதிப்பு.


இலக்கை அடைய நினைத்து 

ஒருமுகப்படுத்தும் போது 

*மௌனம்* சக்தி.


தீவிரமாகப் போராடும் போது *மௌனம்* வலிமை.


பிடிக்காத விஷயங்களை 

ஒத்துக்கொள்ளாத போது 

*மௌனம்* எதிர்ப்பு.


கல்யாணவீட்டினில் 

கால் இடறி விழுந்தபின் எழுந்து  அமர்ந்திருக்கும் போது *மௌனம்* அவமானம்.


நம்மை விட்டு பிரிந்தவர்களை 

பாசத்தோடு நினைக்கும் போது *மௌனம்* துக்கம்...! 


நம் குடி கெடுத்தவர்களை 

பழிவாங்க நினைக்கும் போது *மௌனம்* ஆத்திரம்.


கற்ற வித்தையை கையாளும் போது *மௌனம்* ஆனந்தம்.


அயர்ந்த வேளையில் 

அமைதியான அந்த 

*மௌனம்* உறக்கம்.


உறக்கம் என்று அனைவரும் 

நினைத்திருக்க

உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலார் சூழ்த்திருக்க *மௌனம்* மரணம்...!

விதி ஒன்று தான் என்றும்!


சொன்னவள், பெற்றுவிட்டாள்

அங்கே

சுதந்திரம்,,,,


கேட்டவன்

பெறவில்லை

இதுதான்

அவள் தந்த

மந்திரம்,,,,


சொன்னவள்,

கடல் ஆழம், 

மழை உயரம் 

என்றாள்,,,


உலகமே என் அருகில் என்றே

சுற்றினேன்,,,


சொன்னவள்,

உலகம் சுற்றும்

வாலிபன்

என்றாள்,,,


என் உள்ளூர் 

பாதை தன்னை மறந்து விட்டேன்,,,


சொன்னவள்,

பாட்டு நீ,

பரதம் நான்

என்றாள்,,,


இரு கை 

தாளமிட

தவில் தேடினேன்,,,


சொன்னவள்,

நீ, முன்னின்றால்

முகம் பார்ப்பேன்

என்றாள்,,,,


நிலை ஆடியாய்

நின்று 

விட்டேன்,,,


சொன்னவள்,

அடுத்து

தலை ஆடி நமக்கு

என்றாள்,,,


விளையாடியே

பொழுதை

கழித்து விட்டேன்,,,


சொன்னவள்,

எல்லாம்

நீயே

என்றாள்,,,


இறுமாப்பில்

நானும்

இருந்து விட்டேன்,,,


சொன்னவள்,மன்னாதி 

மன்னன்

என்றாள்,,,,


மறுநாள்

சேவகனாய்

ஆகி விட்டேன்,,,


சொன்னவள்,

முதல் உண்மை

சொல்லி

விட்டாள்,,,


நீரின்,

மூன்று நிலையாய்

நின்று விட்டேன்,,,


சொன்னவள், இனியொரு விதி செய்வோம் என்றாள்,,,,


இறுதியில்

தெரிந்தேன்

முதலாம் விதிக்கு முற்றுப் புள்ளியென்று,,,,


சொன்னவள்,

பெற்றுவிட்டாள்

அங்கே 

சுதந்திரம்,,,,


கேட்டவன்

பெறவில்லை இதுதான் 

அவள் தந்த மந்திரம்,,,,,


பாலா,,,

முகில்

மிதக்கும் தண்ணீர் மூட்டைகள் 


எல்லைக் கோட்டை திருத்திய படியே திரியும்  வரைபடங்கள் 


குளிர் காற்றுக்கு உருகும் பனிக்கட்டிகள்


பருவத்தே உயிர்களுக்கு பால் வார்க்கும் தாய்


நிலவு ராணியின் அந்தப்புரம் 


சூரிய மன்னனின்  ராஜபாட்டை  


நட்சத்திர ஆட்டக்காரர் மைதானம்


ஆகாயத்தின் பஞ்சு மெத்தை


வானவில்லின் தலையணை 


மின்னல் மகளின் தாய்வீடு


மயில்களின் நாட்டிய குரு 


அழகு மங்கைகளுக்கு

குழல் 


அவளின் பெயர் முகில்

வணங்குகிறேன் முன்னோரே

கொண்டாடி முடித்தோம் நாம் நவராத்திரித் திருவிழா,

கொண்டாடப் போகின்றோம் தீபாவளித் திருவிழா,

திண்டாட்டம் சில இங்கு இருந்தாலும் கூட

கண்டுகொண்டேன் நான் ஒரு சந்தோஷம் எங்கும்.


தெருவுக்குச் சென்றாலோ வகை வகையாய்க் கடைகள்,

கடைகளின் முன்னாலோ மக்களின் தலைகள்,

மதநம்பிக்கை இல்லோரும் கடைவைத்திருந்தார்கள்,

மத நம்பிக்கைக்கு அப்பார்ப்பட்டும் கடைவைத்திருந்தார்கள்.


வாங்கியோர் முகத்திலோ வாங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி,

விற்போர் முகத்திலோ வருமானம் தந்த குளிர்ச்சி,

இளையோர் முகத்திலோ மகிழ்ச்சியால் எழுச்சி,

வாலிபங்கள் கண்களிலோ தெரிந்தது ஒரு கிளர்ச்சி.


ஒன்றுபட வைப்பதற்கு கொண்டாட்டம் தேவை,

மனம் மகிழ்ந்து வாழ்வதற்கு கொண்டாட்டம் தேவை,

இயந்திரமாய் மாறிவிட்ட மனிதவாழ்க்கை மாறி,

அழுத்தங்கள் குறைக்கவும் கொண்டாட்டம் தேவை,

எப்படித்தான் சிந்தித்தீர் மூத்தோரே முன்னோரே,

வியந்து போய் பார்க்கின்றேன் உன் தீர்க்க தரிசனத்தை,

தாழ்பணிந்து வணங்குகின்றேன் 

எம் தலைமுறையே பெருமையுடன்.


சுலீ. அனில் குமார்

கே எல் கே கும்முடிப்பூண்டி.


Saturday, 27 October 2018

இக்கரையும் அக்கரையும்இங்கேயும் குழந்தைகள்!
அங்கேயும்
குழந்தைகள்!
இவர்களும் மாணவர்கள்!
அவர்களும்
மாணவர்களும்
ஆனாலும்
இடையே பிரிவினைக்கோடு!
பணம்படைத்தவர்கள் அங்கே!
பணம்அற்றவர்கள்
இங்கே!
இருபக்கத்திலும் ஏக்கங்கள் உண்டு!
இங்கே
அவர்களைப் போல
மிடுக்கான சீருடை
பளபளக்கும் காலணி
கழுத்தினிலே கம்பீரநாடா
விலையுயர்ந்த புத்தகப்பை
அலங்காரக் கட்டிடம்!
நமக்கது போலில்லையே என்றேங்க!
அங்கேயோ
ஆகா அரசுபள்ளி
மாணவர்கள்
எவ்வளவு சுதந்தரமாய்
எத்துணை சந்தோஷமாய்
இருக்கிறார்கள்!
கூண்டுக்கிளியாய்
நாமிருக்க
விடுதலைக்கிளியாய்
அவர்களிருக்க பாக்கியம் என்ன செய்தார்களோ?என்றேங்க
இதற்கு அவரவர் பெற்றோரே காரணம்!
அவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்!
எந்த உணவுக்கும்
பசிதீர்க்கும் ஆற்றலுண்டு!
எங்கு படித்தாலும்
அறிவுக்கு வளர்ச்சியுண்டு!
எப்படி பரிமாறப்படுகிறது?
எப்படி உண்ணப்படுகிறது?
என்பதே முக்கியம்!
அரசுப் பள்ளியிலும்
கனிவான ஆசிரியருண்டு!
திறமையான மாணவரும் உண்டு!

த.ஹேமாவதி
கோளூர்


எல்லைக்கோடு


ஏக்கம் பரிமளிக்க
ஏனிந்த பார்வை
காலைஎழுந்தவுடன்
படிப்பு உள்ளதோ
பரபரப்பு உண்டு
பாதித்தூக்கம்
பாதிபல்துலக்கல்
பாதி சிற்றுண்டி
பரிதவிப்பே
தினசரிவழக்கம்
பள்ளி வாகனமோ
பளிச்சென்று வெளியே....
செல்ல கிளிகளோ
பயத்துடனுள்ளே
அடுத்தடுத்தப் பாடங்களோ இயந்திரகதியில்
பதிவாகும் மூளைக்குள்ளே
இடைவேளைநேரம்
இடர்பாடாய் வந்து
                    சேரும்
நம்முறைவரும்நே
                          ரம்
எதிரொலிக்கும்
மணியின்ராகம்
மதியவேளையுண
                         வும்
கைக்கும்வாய்க்குமான போராட்டம்
மீறிவருமுன்னர்
மணியோசை அதிர்ந்தொலிக்கும்
விளையாட்டுநேரம்
வினாடிக்குள் முடிவதுமதிசயம்
மடிப்பு கலையா
        உடையோடு
மங்கியமனதோடு
மறுபடி பயணம்
வீட்டுக்குள் நுழை
                    யுமுன்
வரிசையில்நிற்கும்
அடுத்தடுத்தடியூசன்கள்
வா என்னழைக்க
பாட்டனுமில்லை
வாய்நிறைந்தூட்ட
பாட்டியுமில்லை
கலைந்த சீருடை
எண்ணெய்காணா
தலையும் அட்டை
கிழிந்த புத்தமும்
கையில்தின்பண்டங்கள்
கொண்டுசாலை
முழுக்க ராஜநடை
போட்டே பாட்டுத்
தெரிக்க செல்லும்
நிஜ ராஜாக்கள் இவரே
ஆசியரிருடன்
ஆனந்தமாய்உரை
                    யாடும்
அமைச்சர் குழாம்
இவர்கள்
பயமற்றுநெஞ்சில்
நேசம் விதைக்கும்
நிலமலர்கள் இவர்கள்.   மதியவுணவிலும் மற்றவர்க்கு பகிரும் கொற்றவர்கள்
விளையாட்டைக்
                     கூட
நிஜமாய்நினைக்கும்
விளையாட்டு வீரர்
இவர்கள்
வீடுசென்றால் செல்லத்திட்டுடன்
சிறுபலகாரம் சிறு
குலாவலுடன் மறுபடியும் ராஜநடை போடும்
அரசுபள்ளிஇளவரசுகள்
ஏனிந்த பாகுபாடு
எதற்கு மனதில்
             வேறுபாடு
வேண்டாம் இந்த
     எல்லைக்கோடு
பணம் தவிர்ப்பீர்
மனம் வளர்ப்பீர்
இயற்கையின்
நியதி கண்டு
             மழலையர்
கல்வியைத்தருவீர்
கௌரவம்பார்க்கும்
கல்வியும் ஒருவ
                   கையில்
கருணைக்கொ
                  லையே
என்றுணர்ந்து
ஏக்கம் தீர்ப்பீர்

🌹வத்சலா🌹


ஆண்டவனின் படைப்பில் நீயொரு அதிசய வண்ணப்படமே

சில்வண்டே
சிறு துளி பூச்சியே
ஆண்டவனின் படைப்பில்
நீயொரு அதிசய
வண்ணப்படமே
உலகின் ஏற்றத்தா
                      ழ்வை
உன்சிறகில்சிறந்த
வரைகோடுகளாய்
வலைகோடுகளாய்
குறிப்பெடுத்தானோ? அதற்கு
உயிர்க்கொடுத்தா
                       னோ?
மயங்கிய மாந்தர்
தெளிந்திட உனை
                      யும்
வரவழைத்தானோ
எளியதுன்பிறப்பு
வலியதுன் வளர்ப்
                              பு
பெரியதுன் உழை
                          ப்பு
அரியதுன்சிறப்பு
உனைக்கொண்டு
வாழ்வின்தத்துவ
                            ம்
அறியா மனிதருக்
                             கு
என்றுமில்லை
                     சிறப்பு
🌹வத்சலா🌹


கல்வியை சமமென ஆக்கிடுவோம்

உங்களையும்         
உடைகளையும்
பள்ளிக்கட்டிடங்களையும்
ஆர்வமாய் நாங்கள் காண
நீங்கள் எங்களை அதிசயமாய் பார்க்கின்றீர்
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்
உலகின் முதல் அதிசயம் அம்மா
அவருடன் தினமும் கைப்பிடித்து நடந்து செல்வதும்
வழிதோறும் விழிக்கு விருந்தும்
வேடிக்கை விநோதங்களும்
மதியவேளையில் அம்மாவின் உணவு ஊட்டல்
எத்தனை  ஆனந்தம்
இதை நீங்கள் அனுபவித்ததுண்டா

தாய் இப்போது எங்களை அரவணைப்பதால்
வயதானால் அவர்களை நாங்கள் அரவணைக்கின்றோம்
நாங்கள் விரும்பிய பாடம்
விரும்பிய மொழியில் படிக்கின்றோம்
பல்வகை திறமை வெளிப்படுத்த
வாய்ப்புகள் எல்லாம் தாராளம்
அதை பயன்படுத்த வைக்கும் ஆசிரியர்கள் ஏராளம்
தாய்மொழியில் தயக்கமின்றி பேசுகிறோம்
அயல்மொழி அலட்டல் எங்களுக்கில்லை
ஆசிரியரின் அன்பான கற்பித்தல்
பெற்றோரின் சுகமான அரவணைப்பு
எத்தனை சுகம்
நீங்களும் இங்கே வாருங்கள்
சேர்ந்து நாமும் பயின்றிடுவோம்
புதிய பாரதம் அமைத்திடுவோம்
பெரிய பதவியில் உள்ளோரெல்லாம்
அரசுப் பள்ளியில் படித்தோரே
கல்விச்செல்வம் அழியாச்செல்வம்
அதில் உயர்வென்ன தாழ்வென்ன
நாங்கள் படித்து பட்டம் பெற்று
சட்டங்கள் அமைத்து
கல்வியை சமமென ஆக்கிடுவோம்

தி.பத்மாசினி


தனிமனித சுதந்திரம்ஓரினச்சேர்க்கை தவறே அல்ல! தனிமனித சுதந்திரம்,புரிந்துகொண்டேன் நான்.

பிறன்மனை நோக்குதல் தனி மனித சுதந்திரம், தவறென்று சொல்வதே தவறென்றும் புரிந்தது.

குடித்தே அழிந்து, குடியைக்கெடுத்து, செத்தேமடிவதும் தனிமனிதசுதந்திரம்
என்பதும் நன்கு புரிந்தது எனக்கு.

தலைக்கவசம் இல்லாமல் பின்னால் அமர்வது
தனிமனித சுதந்திரம் இல்லவே இல்லை.
பொது நலனைப் பாதிக்கும் புரிந்து கொண்டேன் நான்.

விபத்தில் இறந்த பாதசாரிகளின் எண்ணிக்கை ஆயிரங்களில் என்று புள்ளிவிவரம்சொன்னது.

தனிநபர் சுதந்திரமா? பொது நலன் சார்ந்ததா?
இது என்பது தான் புரியவில்லை எனக்கு.

குழப்பமேதோ தெரிகிறது  என்னுடைய புரிதலில்?
புரிந்தவர் சொன்னால் புரிந்து கொள்வேன் நான்.

சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.


பொடிக்கவிதைகள்    படிக்கட்டுப் பாடம்

நல்லவை பழகும்போது
படிக்கட்டு ஏறுதல்போல
கடினமாக இருந்தாலும்
உன்னை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்!
தீயவை பழகும்போதோ
படிக்கட்டு இறங்குதல்போல
எளிதாகத்தான்
இருக்கும் ஆனால்
உன்னை
வாழ்வின் பள்ளத்தில் கொண்டு சேர்க்கும்!

  நதியைத் தேடி

மானிடச் சமுத்திரம்
நடைமேடையை
நாடிவந்து கூடிட
மானிடநதியாம்
தொடர்வண்டி
ஓடிவந்திட
அதைத் தேடி
மானிடச்சமுத்திரம்
ஏறிஅதனுள் கலந்திடும் நிகழ்வு
தினம்தினம்
ரயிலடியில்!

த.ஹேமாவதி
கோளூர்


Friday, 26 October 2018

ஓடுகின்றேன், ஓடுகின்றேன்காலையிலே பள்ளி செல்ல வாகனத்தை எடுத்தேன், எதிர்வந்து நின்றார் எதிர் வீட்டு நண்பர்.
'மருமகளுக்குச் சீமந்தம்,மறக்காமல்
வந்திடுங்கள்'
மகிழ்ச்சியோடு பத்திரிகை தந்தபின் சொன்னார்,
'வீட்டிலே நீங்கள் யாருமே இல்லை, அதனால் தான் வீட்டில் வந்து சொல்ல முடியவில்லை.'
சிரிப்புடனே சொன்னவர் திரும்பியே போக, திரும்பிப் பார்க்கிறேன் நான் எனக்குள்ளே என்னை.

காலையிலே ஆரம்பித்து ஓடுகின்ற ஓட்டம், இரவினிலே முடிகிறது வீடுசேர்ந்த பின்னே.
பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கமுடிவதில்லை,
நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதில்லை,
உடல்நலனைப் பேணவேண்டும் என்றும் எண்ணமில்லை,
உறவுகளைப் பார்ப்பதற்குக் கூட நேரமில்லை.

போகும் இடம் வெகுதூரம் அது தெரியும் எனக்கு,
முடிக்க வேலை ஏராளம் புரிகிறது எனக்கு.
துணைக்கு வேறு ஆளுமில்லை அதுகூட நிஜம் தான்.
இருந்தாலும்....
எதற்காக இந்த ஓட்டம் சொல்லத் தெரியவில்லை,
எத்தனை நாள் இந்த ஓட்டம் அதுவும் தெரியவில்லை.
ஓடுகின்றோம் ஓடுகின்றோம் ஓய்வெடுக்காமல்,
ஓய்ந்துபோனபின்...
ஓயந்து போனபின் இங்கு யார் இருப்பார் துணைக்கு?

சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.


சின்ன சுகங்களும் கோடி இன்பங்களும்விடியலில் துயில்நீங்கி எழுகையில் கண்கள் கொஞ்சலாய் நம்மைக் கெஞ்சுகையில் அப்படியே தலையணையில் சாய்ந்து கண்களை இலேசாக மூடுவோமே............
அது சின்னசுகம்தான்!
ஆனால்
கோடி இன்பம்!
சோம்பலில்
உடலை முழுவில்லாய் வளைக்கையில்
உணர்ந்திடும் சுகம் சின்னதுதான் ஆனால் கோடி இன்பம்!
தொடர்வண்டிப் பயணத்தில்
நிற்கக்கூட இடமில்லா நெரிசலில் நமக்கருகில் அமர்ந்திருந்தவர்
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிட  எழுகையில் நாம் அமர்வோமே அது
சின்னசுகம்தான்
ஆனால்
கோடி இன்பம்!
அசதியில் கண்கள்
துயருறும்போது
இமைகளை மூடி
இருகைகளால்
பொத்தி கருமைக்குள் ஆழ்கையில் கண்களில் ஏற்படுமே சுகம் சின்னதுதான் ஆனால் கோடி இன்பம்!
நடக்கையில் திடீரென வானம்
சொரியும்  சிறுதூறலின் துளிகள் நம்தேகந் தொடுவது சின்ன சுகம்தான்
ஆனால் கோடி இன்பம்!
மெரினாவில் கால்கடுக்க மணலில் புதைந்துபுதைந்து நடந்துமுடிவில்
துள்ளிவரும் கடலலைகளில் கால்களை நனைக்கிறோமே
சின்ன சுகம்தான்
ஆனால்
கோடி இன்பம்!
தொடர்வண்டிப்
பயணத்தில்
சன்னலோர இருக்கையில்
வெளியே பார்க்கையில்
அறிமுகமில்லா குழந்தைகள் தங்கள் சிறுகைகளை அசைத்து டாடா
சொல்கையில்
உண்டாகும் சுகம்
சின்னதுதான்
ஆனால்
கோடி இன்பம்!
ஆறுதல் தேடித்
தவிக்கையில்
அருகிலிருக்கும்
நட்பின் தோளில்
சாய்ந்திடுகையில்
சின்னசுகம்தான்
ஆனால்
கோடி இன்பம்!

த.ஹேமாவதி
கோளூர்


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS