ஓரினச்சேர்க்கை தவறே அல்ல! தனிமனித சுதந்திரம்,புரிந்துகொண்டேன் நான்.
பிறன்மனை நோக்குதல் தனி மனித சுதந்திரம், தவறென்று சொல்வதே தவறென்றும் புரிந்தது.
குடித்தே அழிந்து, குடியைக்கெடுத்து, செத்தேமடிவதும் தனிமனிதசுதந்திரம்
என்பதும் நன்கு புரிந்தது எனக்கு.
தலைக்கவசம் இல்லாமல் பின்னால் அமர்வது
தனிமனித சுதந்திரம் இல்லவே இல்லை.
பொது நலனைப் பாதிக்கும் புரிந்து கொண்டேன் நான்.
விபத்தில் இறந்த பாதசாரிகளின் எண்ணிக்கை ஆயிரங்களில் என்று புள்ளிவிவரம்சொன்னது.
தனிநபர் சுதந்திரமா? பொது நலன் சார்ந்ததா?
இது என்பது தான் புரியவில்லை எனக்கு.
குழப்பமேதோ தெரிகிறது என்னுடைய புரிதலில்?
புரிந்தவர் சொன்னால் புரிந்து கொள்வேன் நான்.
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.