எந்தன் மொட்டை மாடியில் மினுமினுத்த
நட்சத்திரங்களை
உனது மாடிக்கு
அனுப்பி விட்டேன்...!
எனது வாசலில் கரைந்த காகங்களை
உனது வீட்டிற்கு
விரட்டி விட்டேன்...!
இரவு முழுவதும் கனவுகளாய்
வந்து பேசும்
உனை மட்டுமே
மச்சம்போல
மனதுக்குள்ளே
அமர்த்திவிட்டேன்
வாழ்க நீ செல்லம்மா...!
*பொன்.இரவீந்திரன்*