மஞ்சள்நீராட்டு
வானம் சல்லடையாகியது!
கார்முகில்கள்
சமங்கலிப் பெண்களாகின!
இடி அங்கே மேளமாகியது!
மின்னலோ விளக்காகியது!
'சோ' வெனக் கொட்டிய மழையில்
பூமிப் பெண்ணுக்கு
மஞ்சள்நீராட்டு
இனிதே நடந்தது!
************************
குளிரில் மரங்கள்
பருவமழையில்
மரங்களும்
குளிரில் நடுங்கி
போர்வையாம்
கதிரவனைத் தேடும்!
ஆனால் மழையில்
நனைந்த போர்வையாய்
கதிரவனோ
தான்காய வழியின்றித் தவிக்கும்!
த.ஹேமாவதி
கோளூர்