Header Ads Widget

Responsive Advertisement

இக்கரையும் அக்கரையும்



இங்கேயும் குழந்தைகள்!
அங்கேயும்
குழந்தைகள்!
இவர்களும் மாணவர்கள்!
அவர்களும்
மாணவர்களும்
ஆனாலும்
இடையே பிரிவினைக்கோடு!
பணம்படைத்தவர்கள் அங்கே!
பணம்அற்றவர்கள்
இங்கே!
இருபக்கத்திலும் ஏக்கங்கள் உண்டு!
இங்கே
அவர்களைப் போல
மிடுக்கான சீருடை
பளபளக்கும் காலணி
கழுத்தினிலே கம்பீரநாடா
விலையுயர்ந்த புத்தகப்பை
அலங்காரக் கட்டிடம்!
நமக்கது போலில்லையே என்றேங்க!
அங்கேயோ
ஆகா அரசுபள்ளி
மாணவர்கள்
எவ்வளவு சுதந்தரமாய்
எத்துணை சந்தோஷமாய்
இருக்கிறார்கள்!
கூண்டுக்கிளியாய்
நாமிருக்க
விடுதலைக்கிளியாய்
அவர்களிருக்க பாக்கியம் என்ன செய்தார்களோ?என்றேங்க
இதற்கு அவரவர் பெற்றோரே காரணம்!
அவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்!
எந்த உணவுக்கும்
பசிதீர்க்கும் ஆற்றலுண்டு!
எங்கு படித்தாலும்
அறிவுக்கு வளர்ச்சியுண்டு!
எப்படி பரிமாறப்படுகிறது?
எப்படி உண்ணப்படுகிறது?
என்பதே முக்கியம்!
அரசுப் பள்ளியிலும்
கனிவான ஆசிரியருண்டு!
திறமையான மாணவரும் உண்டு!

த.ஹேமாவதி
கோளூர்