கைக்கெட்டும் தூரத்தில் கண்ணயர்ந்து தூங்குகிறாய் என்மீதுள்ள நம்பிக்கையால் காற்றில் கலைந்த உன் சால்வையை சரிசெய்யும் என் கண்களில் காமம் இல்லை. மழையில் நனைந்து மண்சாலையை கைக்கோர்த்து நடக்கும் உன் உடல் மொழியில் எனக்கு காதல் துளிர்த்ததில்லை துவளும் வேளையில் தலைகோதி ஆறுதல் சொல்கையில் என் தாயாக முகம் பார்த்தே என் மனம் படிக்கையில் சகோதரியாக தோள்பட்டை பிடித்து சமாதானம் செய்கையில் தோழனாக இருக்கும் நீ என் உடன்பிறந்தாள் இல்லை என் மடியில் சாய்வதால் காதலியும் இல்லை எந்நேரமும் என்நலம் நினைப்பதால் மனைவியுமில்லை உன் முந்தானை என் சோகம்துடைக்கத்தானே தவிர நான் துயில் கொள்வதற்கு அல்ல.. ஏனெனில் நீ எனது தோழி. பாரதிகண்டதோழி கண்ணம்மா போல..எனக்கு யாதுமாகி நின்றவள்.
🌹வத்சலா🌹