Now Online

Monday, 5 August 2019

வானில் பிறை!வெட்டிய நகத்தை மேகத்தில்
ஒட்டி விட்டது யாரோ?
தட்டிப்பறிக்கும் அழகினிலே
தாகம் தணிப்பது யாரோ?
ஒட்டி உறவாடும் மின்னலை
கட்டிப்போட்டு களவாடியது யாரோ?
முட்டிமோதிய வேகத்தில்
கண்ணீர் மழையைப் பொழிவதும் யாரோ?
தட்டுத்தடுமாறும் பாதங்களை
தடாக மலரென வர்ணிப்பதும் யாரோ?
கொட்டும்முரசாய் கொள்கையுடன் வலம்வரும்
எட்டுத்திக்கும் எழில்மறையாய்ப் பூத்து
இதயத்தைக் காக்கும் சுகமான தமிழ்தானே!
பௌர்ணமி நிலவுக்கு பாதபூசை செய்ய
போட்டிப் போடும் பொறுப்பாளன் நானே!
வாழ்க எம் தமிழ்!


Sunday, 4 August 2019

நிலா கவிதை

மேகம் பொதிந்து வைத்த 

வைரமாய் ஒளிர்கின்ற

வெண்ணிலவே!

குளிர் காற்று உனைத்தீண்ட

கோபம் கொண்டாயோ?

ஒளிய நினைந்தாயோ?

சீரான வானத்தில் நீ அசையாது 

சிலையாக நின்றது ஏன்?

சூரியனின் ஒரு பெருமூச்சுக்கு

சூழ நிற்கும் உயிர்கள் வாடி

விடுத்த வியர்வைத் துளிகளும்......

வெப்பக் கொப்புளங்களாக

வெடித்து வழியும் வேதனையை

உன் மென்கிரணக் கரம் கொண்டு

நீவி விட மனமுண்டோ

சொல் நிலவே?

நாளெல்லாம் பாடுபட்ட உழைப்பாளி

களைப்போடு வரும் நேரம்

தாயென உன் தளிர் கரத்தால்

தொட்டாலே போதும் பசிமறந்தே

காலைவரை கண்ணயர்ந்தே

தூங்குவான் கவலைநீங்கியே!

 🌹வத்சலா🌹


என் தேவதை


என் முகம் காணா முன்னமே

என்னை கொஞ்சி முதத்தமிட்டு 

ஊணும் கொடுத்து

உயிரும் கொடுத்து 

கல்வியும் கொடுத்து

அறிவும் கொடுத்து

ஆற்றலும் கொடுத்து

உண்மையை போதித்து

அறநெறியை காண்பித்து

பாலுடன் பண்பையும் ஊட்டி

பாசத்தையும் கூட்டி

நேசத்தையும் காட்டி

வயிற்றையும் நிரப்பி

செவியையும் நிரப்பி

நன்மையை செய்யவும்

தீமையை விட்டு அகலவும் வழிகாட்டி என்னை பட்டதாரி ஆக்கி

அரசு வேலையும் வாங்கித் தந்து

என் தலையை உயர்த்தி

இவ்வுலகில் என்னை தலை நிமிர்ந்து நடக்கச் செய்த என் தாய் தந்தையரே 

எனக்கு தேவதை ( கள்)


தி.பத்மாசினி சுந்தரராமன்

நட்புஇனிது இனிது ஏகாந்தம் இனிதுதான் ஆனால் அதைவிட இனிது நட்பு!

உணர்வுகளைப் பகிர்ந்திட

இன்பங்களைப்

பெருக்கிட!

துன்பங்களைக்

குறைத்திட!

விழிநீரைத் துடைத்திட!

மொழித்தேனில்

நனைந்திட!

ஊரெங்கும் உலாபோக!

தனிமையைப்

போக்கிட!

தொலைதூரம் சென்றாலும்

அலைபேசியில்

பேசிமகிழ்ந்திட!

உனக்கென்றும் துணையாக நான்

உன்கூடவே நிழலாக இருப்பேன்

என்பதை உணர்த்த!

கட்டாயம் ஆளுக்கொரு நட்பு இங்கே வேண்டும்!

அப்படியொரு நட்பு வாய்த்துவிட்டால்

கடலே பொங்கினாலும்

மலையே

சாய்ந்தாலும்

வானமே இடிந்தாலும்

நிலமே

பிளந்தாலும்

கப்பலே கவிழ்ந்தாலும்

கவலை படவேண்டாம்!

வள்ளுவன் வாக்கின்படி

உடுக்கை இழந்தவன்கை போல 

நண்பனின் கை

உடனே உதவ ஓடிவரும்!

அகத்தில் மலர்ந்த நட்பின் வாசம்

சோகங்கள் அனைத்தையும்

ஆக்கிடும் நாசம்!

பெற்றிடுமே உன்வாழ்வோ பூவின்வாசம்!

பள்ளியில் பூத்திடும் பால்யநட்பு சிலருக்கு வேர்விட்டுநிலைக்கும் இறுதிவரை!

கல்லூரியில் வண்ணக்கனவுகள்

காலத்தில் பூத்திடும் நட்பு ஆயிரம்ஆனை பலத்தைத் தந்திடும்!

நல்லநட்பு ஆலமரம்போல

விழுதுகளுடன் நிலைத்துநிற்கும்!

அருகுபோல் வேரோடி படர்ந்திருக்கும்!


த.ஹேமாவதி

கோளூர்

என்றும் வாழ்க.... இனிய நட்பு


துவண்டு கிடந்தால் தோளில் கையிட்டு ...

'கலங்காதே....

சரியாகும் '....

சொன்னது தோழமை ...


எதை எப்படிச் செய்வது என்று ..புரியாமல் நின்றபோது ..

இதை இப்படிச் செய் என்று சொன்னது தோழமை .....


உறவுகள் வரும் முன்னே ..ஓடோடி வந்து நின்று ..உன் உறவும் நான் அல்லவா என்றே  சொன்னது தோழமை ...

 

எப்படி எங்கே தவித்திருந்த போதும் இருளாய் மழையாய் இருந்திட்டபோதும் ...

உதவிட நான் இருக்கிறேன் ..ஓடி வந்தது தோழமை .....


திறமைகள் கண்டு ....மகிழ்ச்சியும் கொண்டு..உயர்த்திடும் வழி சொல்லி ... தூண்டி ..வளர்த்தது..

தோழமை ...


பெற்றோரிடமும் உற்றவரிடமும்..சொல்ல முடியாத போதும் ..

எல்லாமும் சொல்ல 

ஏற்றது தோழமை ...


சிக்கலை எல்லாம் சிரித்துக்கொண்டே ..

கேலியும் ஆக்கி  கிண்டலும் செய்து.. இலகுவான மனம்  பெறவைத்து

இனிக்கச் செய்வது தோழமை...


நினைத்துப் பார்க்கவும் நினைத்து நினைத்துச்  சிரிக்கவும் ..சொல்லிச் சொல்லி..மகிழவும் ..

கண்டித்து திருத்தவும் ...

பகிர்ந்தே உண்ணவும் ..

தோழமையின் சிறந்த

உறவேதும் உள்ளதோ ... 


இந்த வாழ்வை இனிமையாக்கிட இனிய நட்புகள் சிலராவது வேண்டும் ..

கைக்கோர்த்து நடந்திட காயங்கள் ஆற்றிட கண்டிப்பாய் நட்புகள் 

நம் வாழ்வில் வேண்டும் ...


வாழிய நட்பது ...வாழ்கவே என்றென்றும் ....

வையம் அது வாழும் வரை வாழ்ந்து இருக்கும் நட்பு ...வாழிய நட்பு..


          தெய்வானை,

              மீஞ்சூர். 

👭👭👭👭👭👭👭

எறிந்த ஒரு சொல்


எறியப் படுகின்ற 

ஒரு சொல் ...எல்லா

பக்கமும் 

கூர்மையான...

ஆயுதமாக ....


எந்த மருந்துக்கும்

குணமாவதில்லை..

அடைந்த வலி  ....


மறந்தே போனாலும் 

அழிந்து போவதில்லை 

விளைந்த ..ரணம் ...


             தெய்வானை,

          :: :: : ..மீஞ்சூர்::::::

ஆடுகிறாள் காவிரி


பிறந்தவீட்டை விட்டுவிட்டு

புகுந்தவீட்டில்

வாழ்வதற்கு

பெருகியோடும்

பிரியத்துடன்

ஆடுகிறாள் காவிரி!

ஆடியிலே இவள்

புதுப்பெண்ணாவாள்!

புதுமணத் தம்பதிகள் ஆடியிலே பிரிந்திருக்க காவரியோ கரைகாண ஆசையோடு கண்ணான கணவனாம் 

கடலழகனைக் கூடிடவே 

காற்றை சலங்கைகளாய்க்

கட்டிக்கொண்டு

கணவனைக் காண்பதால்

மேனியெங்கும்

நெளிந்தோடும்

நாணத்தைப் பிறரறியாவண்ணம்

இருமருங்கும் நின்றிருக்கும்

அண்ணன்மாராம்

மரஞ்செடிகொடிகள்

அன்போடு சீரெனத்

தந்த வண்ணமலர்ச்

சேலைக்குள் மறைத்தே

தந்தன தந்தன என

தாளம்பாடி வருகிறாள் காவிரி!

ஆடிப் பதினெட்டில்

சுபமுகூர்த்தவேளை

நாடி வருகின்ற அவளை வரவேற்க

ஒளிரும்  தீபமேந்தி

மணக்கும் மலர்தூவி

பெண்கள் காத்திருக்க!புத்தம்புது தம்பதியர் இனிக்கும் தம்இல்லறத்தில்

இவள்துணைநாடி

வரவேற்க

தகிடதகிடப் பொங்கிப் பெருகிட

திமிதிமியென்று

சிலிர்த்துப் பெருகிட

ஆடிக்கொண்டே

ஓடிவருகிறாள் காவிரி!

நன்மைகள் கோடி

நமக்கு தந்தபடி!


*த.ஹேமாவதி*

*கோளூர்*

Friday, 2 August 2019

வைகறைத் தென்றல்வான் 

பனிக்குளிரோடு மலராடுது

தேன் சிந்தி வைகறை தென்றலிலே நீராடுது,,,,

பூவானது

பொலிவாகுது

புது மணம் பரப்பி இங்கு பெயர் வாங்குது,,,,,,,,,,


தேன் உண்ண வண்டுகளும் தொட ஏங்குது,,,

வைகறை தென்றல் வர

கண் தூங்குது,,,

வண்டானது

திண்டாடுது

ஆதவனும் வரத்தானே

எதிர் பார்க்குது,,,


ஓரிடம் 

நின்றாலும் 

மலரே நீதான் உயர்நிலை அடையும் 

கலையே!

ஆயிரம் மலரை நான் கண்ட போதும் வைகறையில் காண முடியலையே,,,,


வேருடன் உறவு உனக்கும் உண்டு

வேரை நீயும் பார்த்தது 

இல்லை,,,

வைகறைத் தென்றலை முகர்ந்து நீயும் தந்ததை 

வேரும் அறிந்ததில்லை,,,


பாருக்குள்  

நானும் நீயும் இருக்கையிலே

சோறுக்கு அதுவரை கவலையில்லை,,,

ஏர் முனை பூட்டி உழுதிட

உழவன்,

வருவதும் வைகறை தென்றலிலே!


பாலா

பரிசு

சாதியற்ற

இந்தியாவாய்

ஒரு நிமிடம்


ஊழலற்ற

அரசியலாய்

ஒரு நாள்


பாலியல்

குற்றம் நிகழா

ஒரு மணி நேரம்


ஒழுகாத

அரசுப் பேருந்தில்

ஒரு மழைப் பயணம்


கரியமிலவாயு

 கலக்கா

ஒரு மூச்சுக்காற்று


முற்றிலும்

மூடத்தனமற்ற

ஒரு மதம்


உன்

பிறந்த நாளுக்கு

என்னிடம்


ஒரு

பரிசு கேள்

என்றது

ஒரு

குற்றமா..?


_ வெள்ளத்துரை

அச்சச்சோ


நேத்துத்தானே பாத்தேன்

நெறைய பேசினேன்

நல்லாத்தானே இருந்தாரு;


கொஞ்சமா சிரிச்சாரு

கொஞ்சித்தான் பேசினாரு

குறைச்சலாத் தெரிதுன்னாரு;


அறிவுரை சொன்னாரு

அன்போட பாத்தாரு

அணைக்கக் கூட செஞ்சாரு;


அரசியல் பேசினாரு

அந்தரங்கம் சொன்னாரு

அடடே...

அத மட்டும் சொல்லல...


எல்லாந்தான் பேசினாரு

என்னபேசி என்ன செய்ய;


அச்சச்சோ...

அத மட்டும் சொல்லாம போயிட்டாரே;


அவருக்கும் தெரிஞ்சிருக்கு.......


நியாயவான்கள் தண்டிக்கப்படுவரென்று:


கரிசல் தங்கம்

நிசப்தம்


நீ சப்தம் போடாமல் இருந்தால் உருவாகும் நிசப்தம்


இரவினிில் நிசப்தம்

அழகிய இனிமையான உறக்கம் தரும்


நடுநிசியினில் நிசப்தம் கிலியுண்டாக்கும்


கவிஞர்களுக்கோ நிசப்தம் 

கற்பனை வளத்தை உருவாக்கும்


நோயாளிகளுக்கு நிசப்தம் 

நோயைப் பாதி குறைக்கும்


மன அமைதி இல்லாதவர்க்கு 

நிசப்தம் மன நிம்மதி தரும்


யோகா பயிற்சியின் போது நிசப்தம் 

உடலையும் உள்ளத்தையும் வலிமைப்படுத்தும்


பல விதத்தில் 

மாசுபடும்  இந்த உலகத்தை நிசப்தத்தால் நிரப்பி 

முடிந்தவரை ஒலி மாசைக் குறைப்போம்


தி.பத்மாசினி சுந்தரராமன்

அக்னி சிறகுகளுக்கு அழிவேது

ஓடும் ராமேஸ்வரம் ரயிலில் தொடங்கி நிற்காமல் போகும் ஏவுகணையில் முடிந்தது...


தோன்றினால் உம்போல் தோன்றவேண்டும் ..  

திருக்குறள் படி தோன்றினார் புகழோடு மறைந்தாய்.....

உன்னிடம் உள்ளதை தலைமுறைக்கு தந்துவிட்டு போய்வருகிறேன் பிள்ளைகளே என்று!!!!!


அக்னி சிறகுகளுக்கு அழிவேது என்று

உன் நினைவலைகளை எங்களிடம் விட்டு விட்டு

அக்னி சிறகுகளுடன் பறந்துவிட்டாய்

இம்மண்ணுலகை விட்டு விட்டு....


 கண்ணீர் கனவு களை மறைக்கும்

துடைத்து கொண்டு கனவு காணுங்கள் என்றாய்!!!


நீ சென்றகனத்தில் இருந்து.

அழுகையை நிறுத்திவிட்டோம்

ஆனாலும் உம் மை காண கனவு டன் நீர் வந்து நிற்கிறது ....


நீர் சொன்னது போல்

சோம்பலை தூக்கிப் போடுவோம்

திருக்குறளையும் நாட்டின் கனவையும் சாதிப்போம்...!!


மண்ணில் இருந்து விண்வெளியை ஆராய்ச்சி செய்துபோதாது என்று

விண்ணின் கே சென்று விட்டார்!!!


உம் இளைஞர்கள் எழுச்சி யுடன் இருக்கிறோம்

உம் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்..


நீ விண்ணில் இருந்து உம் மண்ணின் மைந்தர்களை வாழ்த்துவாய்

இந்தியா நாடு வல்லரசு ஆவதற்கு...


                             திரிபுரசுந்தரி.

செய் நன்றி கொன்றார்பட்டம் பார்த்து விதைத்து 

வந்தேன்,,,

பாத்தி கட்டி 

நட்டும் 

வந்தேன்,,, 

கட்டம் போட்டு வாழ்க்கையைத் தான்

திட்டம் போட்டு வாழ்ந்து 

வந்தேன்

நான் ,

திட்டம் போட்டு வாழ்ந்து

வந்தேன்,,,,


ஏர் பிடித்து நானுழுக

என் தம்பி எழுத்தெழுத,,,,

எழுத,

என் தலையில் எழுதவில்லையே

இறைவா!

நீ,

என் தலையில் எழுதவில்லையே,,,

அவனென்றும் உழுகவில்லையே

இறைவா!

அவனென்றும் உழுகவில்லையே,,,


பார்புகழ 

படித்து 

வந்தான் 

பகலிரவா நானுழுக,,, 

அவன்,

ஏர் பின்னும் வந்ததில்லையே இறைவா!

நான்,

யார் பின்னும் சென்ற

தில்லையே

இறைவா!

நான்,

யார் பின்னும்

சென்ற

தில்லையே,,,,


ஏர்பூட்டி நானுழுது

எருமை ரெண்டு மேய்த்தாலும் 

கூறுகெட்டு வாழவில்லையே

இறைவா!

நான்,

ஊர் போற்றும் செல்லப் பிள்ளையே,,,,!

(விவசாயி),,,,,

இறைவா!

நான்,

ஊர் போற்றும்

செல்லப்

பிள்ளையே,,,,,!


தார் போட்ட ரோட்டிலே தடம் பார்த்து 

நடை பழக

தாரத்தோடு போக 

வைத்தேனே,,,,

இறைவா!

அவனை,

ஆதாரத்துடன் சேர்த்து வைத்தேனே,,,,


யார் வீட்டு திண்ணையிலோ

நான் கூனி கிடக்கின்றேன்

தேன் குளவி கொட்டுகின்றதே

இறைவா!

இதை,

இத்தனை நாள் வைத்திருந்தேன் மறைவா,,,,

கதை,

இளையவர் 

செய் நன்றி கொன்றாரே இறைவா!


பாலா

நிலவுக்கு நேரமில்லைகாதலுக்கு சாட்சியாக காதலிக்குத் தோழியாக

நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.


குழந்தையின் அழுகை நிற்க

பிள்ளைக்குச் சோறூட்ட

நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.


இரவினிலே குளிர்விக்க, படகினிலே ஒளியூட்ட

நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.


மண்ணில் நின்று விண்ணை நாடி

பூமியுடன் உறவு தேடி

சென்றிருக்கிறது சந்திராயன், அவன் சென்று சேரவில்லை.


வரவேற்க ஆள் வேண்டும்

உபசரிக்க நாள் வேண்டும்

ஆகவே காதலரே, அன்னையரே, மானிடரே

நிலவினை அழைக்காதீர், நிலவுக்கு நேரமில்லை.


*சுலீ. அனில் குமார்.*

சாதனைதான் வாழ்க்கையா


கொட்டிக் கிடக்கிறது வாய்ப்புகளும் வழிகளும் ...

நம் முன்னே 

எப்போதும் ....


கரடுமுரடான பாதைகளும் ..

சீர்திருத்திய சாலைகளும் ...

தேர்ந்தெடுத்துக்

கொள்ள தெளிவு மட்டும் போதும் ....

சாதிக்கத் துடித்தால் கரடுமுரடு பாதை...

மனம் கொஞ்சம் சலித்தால் ...

சாலை வழிப் பாதை....


சாதனைகள் மட்டும் ..

வாழ்க்கையா என்ன?

சாதாரண 

வாழ்க்கையும்...

சாதனைகள் தானே! 


        தெய்வானை, 

           மீஞ்சூர்.

ஆடிப் பெருக்கு


வெள்ளாம போடணும்

வெளச்சலப் பாக்கணும்


அதுக்கு

வெதயத் தூவணும்


அதுதான் 

ஆடிப்பெருக்கு:


ஆற்றங்கரை யோரம்

ஆனந்தம் கொள்ளவே...


திருமஞ்சனம் நடக்கட்டும்

தாலிப் பொட்டும்

தஞ்சாவூர் பட்டும்

ஆத்துல விட்டாதான்

பெருமாளுக்குச் சீதனமாம்;

தவறாம செஞ்சுருங்க:


கொல்லிமலையில நீராடி

அரப்பளிசுவரரை 

மறக்காம தொழுதிடுங்க;


எல்லா நாளும்

ஆத்துல (வைகை)

நீர் பெருக்கெடுத்து ஓடுதோ என்னவோ...

இன்னைக்கு நிச்சயம்

பெருக்கெடுக்க வைப்பாங்க

கொஞ்ச நேரம்;


சாத்திரமுன்னு:


எல்லாம்

தவறாம நடக்குது

தப்பாய்


நிஷமாய் மாற

நாமென்ன செய்ய...


எட்டுவழிச் சாலையும்

வேணாம்....


டிஷிட்டல் இந்தியாவும்

வேணாம்....


விவசாயம் போதுமுங்க


மண்ணும் மக்களூம்

நலமென வாழ

ஆத்துல ஆறு பெருக்கெடுத்து ஓட....


மரத்தை அழிக்காதீர்...ஆடி 18 மட்டுமல்ல

எல்லா நாளூம் 

பெருக்கமே.....


பெருக்குவோம் இயற்கையை


கூட்டுவோம் விவசாயத்தை


கழிப்போம்

கடந்த காலத்தை


வகுப்போம் எதிர்காலத்தை


நம்பிக்கையோடு.....

வாழ்த்துகள்


தமிழ் தங்கம்

தேசப்பற்றாளன்

தன் மீதுள்ள

சூத்திரக் கழிவை

சுத்தம் செய்ய

துப்பின்றி


ஊருக்குள்

இருக்க விடாமல்

சக மனிதனை

சேரிக்குத் 

துரத்தி விட்டு


உலகச் சமத்துவத்தை

காதுவரை

வாய்கிழிய பேசுவேனே


இந்திய

தேசப்பற்றாளன்..!

மெய்முகம்

கொஞ்சம் பணம் வேண்டுமென்கிற

கேள்வியில்....

கழன்று விழுகின்றன

முகமூடிகள்....

புறந்தெறிக்க ஓடுகிறார்கள்....

மெய்முகம் பார்க்கிறேன்

நெஞ்சில் நிறைந்தவளோடு

நான்

*பொன்.இரவீந்திரன்*

Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS