Now Online

Thursday, 31 January 2019

எது சொர்க்கம்?

விஞ்சி நிற்கின்ற

வானம் 

பஞ்சு படர்ந்த

மேகம்

அழகாய் வட்டமிட்ட நிலவு 

அதைப் பார்க்க

ஆயிரம் நட்சத்திர

உறவுகள்..


ஆகா

இன்னொரு 

சொர்க்கம்

இதை விடவா

இருந்துவிட

போகிறது..


நம் கண்களுக்கு

விருந்தாக...!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

நேசம்

என்

கை

மணிக்கட்டை

உரசிப்போகும்


உன் தாவணி முந்தியில் மணக்கிறது


தலைமுறை தாண்டிய நேசம்


*பொன்.இரவீந்திரன்*

Wednesday, 23 January 2019

ஓய்வூதியம்

யாருமற்ற நிலையில்

தள்ளாடும் வயதில்லை

தனியாய் தன்மானத்தோடு

வாழ 

தன் சுயமரியாதை

காக்க

ஓய்வுக் கலாங்களில்

நிம்மதியோடு

வாழ

நிமிர்ந்து

நடக்க

ஓய்வூதியம் மட்டுமே

நம்மை பாதுகாக்கும்

காலம் செல்லும்

வரை நமக்கான

துணை

ஓய்வூதியமே

அதில்

உறுதியாய்

இரு மனமே..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

கொடி பேசியது


சுதந்தரதினத்தில்

சட்டையில் குண்டூசியால்

தேசியக்கொடி

குத்தியபோது

கொடியின் காவிநிறப் பட்டை பேசியது

தனக்குள்ளே

ஏற்கெனவே விடுதலைக்காக

போராடியவர்களின்

தியாகக் குருதியான நம்மையே மீண்டும் ஊசியால் குத்திக்

குருதியைக் களப்புகிறார்களே என்று!


த.ஹே

கோளூர்

சிரிப்பு


அன்பைப் பொழியும் சிலரது சிரிப்பு,

ஆனந்தம்  அளிக்கும் பலரது சிரிப்பு.


இடையூறாய்த் தெரியும் சிலரது சிரிப்பு,

இதமாய் இருக்கும் பலரது சிரிப்பு.


வெறுப்பைக் கொடுக்கும் சிலரது சிரிப்பு,

விருப்பத்தை வளர்க்கும் பலரது சிரிப்பு.


ஆசையை வளர்க்கும் சிலரது சிரிப்பு,

ஆறுதல் அளிக்கும் பலரது சிரிப்பு.


அகத்தை உணர்த்தும் சிலரது சிரிப்பு,

அகத்தை மறைக்கும் பலரது சிரிப்பு.


சிரிக்கவைக்கும் சிலரது சிரிப்பு

சிரிப்பாய் சிரிக்கும் பலரது சிரிப்பு.


மழலையின் சிரிப்பு மனம் கொள்ளை கொள்ள,

மங்கையின் சிரிப்பு மயக்கத்தைக் கொடுக்க,

தந்தையின் சிரிப்பு தயக்கத்தை நீக்க,

அன்னையின் சிரிப்பு அன்பினைப் பொழிய,

மனைவியின் சிரிப்பு மகிழ்ச்சியை அளிக்க,

ஏழையின் சிரிப்பு நிறைவை வழங்க, 

இன்பச் சிரிப்பே மனதினில் நிலைக்க

சிரிப்பே அழகாய் மாறியதிங்கே,

சிரிக்கவைப்பவர் சிறக்கிறார் இங்கே.


*சுலீ அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

Tuesday, 22 January 2019

பூக்கூடையில் இரு மலர் செண்டுகள்.....


சென்றேன்!
புத்தக கண்காட்சிக்கு
என்னுடன் நடந்தது
சிறுவர் மலர்
மொத்தமாய் அள்ளிக்கொண்டேன் இரண்டையும்!
மொட்டு நடந்த
புல்வெளியில்
மலர்கள் இதழ் விரித்தது
கொத்தாய் எனது பூக்கூடையில் இரு
மலர் செண்டுகள்.....
   விஜி கல்யாணி..


குறிசேரா சைவக்கலவி

தலைப்பு: குறிசேரா சைவக்கலவி
கவிதை வகைமை: புதுக்கவிதை
-------------------------------------------

பெருமஞ்சள் முடிச்சுடன்
யாருக்கும் கேட்காமல் பேசி வரும்
பேருந்தின் முன்னிருக்கை
புதுமண ஜோடிகளின்
ரகசியங்களில்
தோற்றுப் போகிறது...
நடு ரயிலில்
விழி செருகி
தலை சாய
முத்தங்கள் பரிமாறும்
அயல் நாட்டு காதலர்களின்
குறிசேரா சைவக்கலவியொன்று.

-கவிஞர். தக்ஷன்


Monday, 21 January 2019

ஏன் தயக்கம்...?கூட்டை விட்டு
வெளியே வரும்
பறவைக்கே
இரை கிடைக்கிறது....

பூனை இருக்கும்
வீட்டில் கூட
எலி தன் இனத்தைப்
பெருக்குகிறது....

காக்கா கூட்டிலும்
குயில்
தன் முட்டையை
இடுகிறது.....

அடுத்த வீடு
பகையென்றாலும்
மரக்கிளை
எட்டித்தான் பார்க்கிறது....

வடக்குத் தெரு
நாய்க்குட்டி
தெற்குத் தெரு
மனிதர்க்கும்
காவல் நிற்கிறது....

மேகத்தை விட்டு
சிப்பியில் விழுந்த
மழைத்துளிகள் தான்
நல்முத்துகளாகிறது....

விடு தயக்கத்தை!
உடை தடையை!
எடு இலக்கை!
வகு பாதையை!
மீறு தோல்வியை?
அடை வெற்றியை!
நாட்டு கொடியை!

தங்கம்கம்சலவள்ளி


மறக்குமா?அரிச்சுவடி  கற்றுத்தந்தவரை
மறக்க நேர்ந்தாலும்
அரிச்சுவடி
மறப்பதில்லை....

பிரம்படி வந்தவரின்
பாடம்
மறப்பதில்லை
அவர் உருவப்படம்
மறந்தாலும்...

வடக்குத் தெற்கு மறந்தாலும்
வரைபடம் மாட்டி
வைத்திருந்த
திசை மறப்பதில்லை...

கைப்பிடித்து
எழுதிய கை
மறக்க பட்டாலும்
எழுதும் எழுத்தில்
அவர் நினைவு
ஒட்டித்தான் வருகிறது.....

காலவோட்டத்தில்
புதுமைகளைச்
சந்திக்கும்போது
நாளை ஆசிரியரிடம்
கேட்டுக் கொள்ளலாம்
என்ற நினைப்பு
வாமனனாய்
இருக்கத்தான்
செய்கிறது...


தங்கம்கம்சலவள்ளி


நூலாம்படை காலம்

பால் குடி மறவா 

கைக்குழந்தையாய்

அடம் பிடித்தழுகிறது

மனம்


நீயோ

திமிராய்க்

கடந்து போகிறாய்

நாத்தனாராய்


நூலாம்படை

படர்ந்த 

பூர்வீக வீடாய்க்கிடக்கிறது

என் காலம் 


*பொன்.இரவீந்திரன்*

வண்டுகள் எங்கே?


மேல்நிலை மாடத்தில் நின்றிருந்தாள் சீதை!

கீழே நடந்துச் சென்றிருந்தான் நாயகன் இராமன்!

ஒருகணம்

ஒரேஒருகணம்

நாயகனின் விழிகளும் நாயகியின் விழிகளும் சந்தித்தன!சந்தித்தவேளையில்

சிந்திக்காமலேயே

இதயங்கள் இரண்டும் காதலிலே வீழ்ந்தன

சிலைகளாய் மாறினர் இருவரும்

சுற்றிலும் இருப்பவர்களை மறந்து!

மௌனத்தில் அங்கே அரங்கேறிய

காதலில் விழிகளே

பெரும்பங்கு வகித்தன!

திடீரென ஆங்கே

வண்டுகளின் ரீங்காரச் சத்தம்

கேட்டனர் சுற்றிலும் இருந்தவர்கள்!

கேட்டவர்கள் அதிசயித்தனர்!

கண்களில் காணாத

வண்டுகள் ஆனால்

காதுகளில் கேட்கின்ற சத்தம்!

புரியாமல் மற்றவர்கள் முழிக்க

காதல்வயப் பட்ட

இருவரோ புன்னகைத்தனர்

காரணம் புரிந்ததால்!

சீதையின் விழிகள்

இராமனைக் கண்டதும்

தாமரையாய் மலர

தாமரையை மொய்க்கும் வண்டுகளாய் மாறின இராமனின்

விழிகள்!

அந்த வண்டுகளின்

ரீங்காரத்தை  கேட்கமட்டுமே முடிந்தது மற்றவரால்!பார்க்கமுடியவில்லை!

ஆனால் விழிகள் வண்டுகளாய் மாறியவிந்தையை

அறிந்த இருவரோ

தங்களுக்குள் நகைத்தனர்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*

இலவசம்ஐந்து கிலோ அரிசி இலவசம் என்றால்

ஐந்து மணி நேரம் வரிசையில் நிற்பார்.


இலவசமாய் பணம் கிடைக்கிறதென்றால்

இலட்சாதிபதி கூட இடையினில் நுழைவார்.


இலவசங்களை எதிர்ப்பவரை எல்லாம்

எதிரிகளாகவே நினைக்கவும் செய்வார்.


இலவசம் என்பது உரிமையாய்ப் போனது,

இலவசம் இல்லையேல் வாழமுடியா தானது.


*ஆனால்*


இலவசமாய் அறிவுரை கிடைக்கிறதென்றால்

ஏனோ ஏற்க மனம் மறுக்கிறது.


இலவசமாய் கிடைக்கும் கல்வியின் மதிப்போ நீரினில் இட்ட கோலம் ஆகிறது.


செலவு செய்தால் மட்டும் அறிவுக்கு மதிப்பா?


இலவசமாய் கிடைக்கும் பொருளுக்கு மதிப்பா?


இது எதிரா? புதிரா? 

புரியாத புதிரா?

புரியாமல் தவிப்பதே என் வழக்கமாய்ப் போனது.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி*

இருண்ட பாதை

ஒழுக்கத்தையும் கல்வியையும் 

விட  

இன்னொன்று

முக்கியமென்று

சமூகம் 

விலகினால்

மீண்டும் 

உலகம்

இருண்ட 

பாதையை 

நோக்கியே..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

புறப்படுங்கள் உறவுகளே


அன்பால் இணைந்த உறவுகளே

உணர்வால் இணையப் புறப்படுங்கள்.


சுயமரியாதை சூடுதணியாமல்

சூளுரையோடு புறப்படுங்கள்.


ஏமாற நாங்கள் தயாராக இல்லை 

என்பதை உணர்த்திப் புறப்படுங்கள்.


உரிமையைக் காப்பதே உன்னதம் என்ற உணர்வோடு நீங்கள் புறப்படுங்கள்.


தன்மானம் காப்பதே தலையாய நோக்கம்

என்ற முழக்கத்தோடே புறப்படுங்கள்.


போராடித்தான் பெறவேண்டுமென்றால்

போராடத் தயாரென்று புறப்படுங்கள்.


அடிமைகள் அல்ல ஆசிரியர்கள் என்று அடலேறுகளாகப் புறப்படுங்கள்.


உரிமைக்காகக் குரல் கொடுக்க,

உணர்வைக் காக்கும் முடிவெடுக்க,

தூற்றுவார் தம்மை வேரறுக்க,

வரும் தலைமுறை நிமிர்ந்து நிற்க,

ஒற்றுமை தனையே உணரவைக்க,

கற்றவர் நாம் என்று புரியவைக்க,

நாளை நமதே என்றுணர்த்த

புறப்படுங்கள் நீங்கள் புறப்படுங்கள்

புதியவிடியலாய்ப் புறப்படுங்கள்.


சுலீ அனில் குமார்

பிரியமுடன் நானும் தாவரங்களும்


புற்களைக் கண்டால் அவற்றின் தலைகளைத் தடவி

அவற்றுடன் பேச

பிரியப்படுவேன்!


கொழுகொம்பைத் தழுவிப் பின்னிப்பிணைந்து

வளர்ந்திருக்கும்

கொடிகளைக்' கண்டால் செல்லமாய் அவற்றை வருடியவாறே இரகசியமாய் அவற்றுடன் பேச

பிரியப்படுவேன்!


பூக்கள் மலர்ந்திருக்கும்

சிறுசெடிகளைக்

காணும்போதெல்லாம்

பாசத்துடன் தொட்டுதொட்டு கண்களால் ரசித்துரசித்துப் பேசப் பிரியப்படுவேன்!


கம்பீரமாய் உயர்ந்து

நிமிர்ந்து நின்றிருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களைக்

கண்டால் சல்யூட் அடித்து பிறகு அவற்றின் நலம்விசாரிக்கப் பிரியப்படுவேன்!


அடிபெருத்த வயதான பெரியமரங்களைக் கண்டால்

அவற்றை இருகரங்களால் சுற்றிவளைத்து அணைத்தப்படியே

பேசப் பிரியப்படுவேன்!


படர்ந்திருக்கும் ஆலமரம் என்றாலோ அருகில் சென்று தொங்கிடும் விழுதெல்லாம் கணக்கிட்டு ஒவ்வொன்றிடமும்

நலம்விசாரிக்கப் பிரியப்படுவேன்!


மரத்தாலான நாற்காலி மேசைகளைக் கண்டால் யாரும் அறியாவண்ணம்

இரகசியமாய் அவற்றிடம் எந்த மரத்திலிருந்து உருவாகி வந்தீர்கள் என் செல்லங்களே எனக்கேட்கப் பிரியப்படுவேன்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*

Saturday, 19 January 2019

அனைவரும் வாருங்கள்

வாடாத வாசமுள்ள மலர்கள்!

சிந்தனையில் பூத்த மலர்கள்!

தேனெனஇனிக்கும்

மலர்கள்!

நிஜவண்டுகளுக்கு

இம்மலர்களிடம்

வேலையில்லை!

கண்ணென்ற வண்டுகள் இம்மலர்களை மொய்த்தால் தேனள்ளிப் பருகலாம்!வாழ்வைச் சீர்படுத்திக் கொள்ளலாம்!

எனவே

அனைவரும் வாருங்கள்!புத்தகச் சாலைக்குச் செல்லலாம்!


த.ஹேமாவதி

கோளூர்

அவசரம்

அவசரத்தில்
ஆயுள்
ஓடுவதையும்  ஆயுள்வரை
அவசரமாக
ஓட்டுவதையும்
உணரா
மக்கள்
வாழ்ந்தும்
பயனுமில..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


எத்தனை கோடிஇன்பம்

🌹
பொன்னாய் சிவந்ததுவானம்!
குளிரைப்போர்த்தியது
                              மேகம்!
நேற்றிருந்த பனிச்சாரல்
நெடுந்தூரம் போனதோ?
தேடியது புல்வனம்!
மந்தகாசப் புன்னகையுடன்
மொட்டுக்களை
மலர வைத்தது தென்றல்
அலை வந்துபோன
ஈரத்தடம் தேடியது கடற்காற்று!!
சிப்பி துளைத்த மழைத்துளி
முத்தெனமாறித்துளிர்த்தது !
வண்டினம் துளைத்தமூங்கில்
வழி நுழைந்த காற்றோ
மோகனம் இசைத்தது!

எட்டிப்பார்த்த நட்சத்திர
சிணுங்கல்கள்.....
எட்டுத்திக்கும் மினுக்கியது!
இயற்கையின் இந்த
பொன்னூஞ்சலாட்டம்
காணுந்தோறும்.....என் இதயம் கேட்ட ஒரே கேள்வி
எத்தனைக்கோடி இன்பம்
வைத்தாய் ?எங்கள்இறைவாஇறைவா!

🌹வத்சலா🌹


வெண்ணிலவுக்குத்தான்மண்ணில் வந்த பெண்ணிலவல்ல விண்ணில் வந்த பெண்ணிலவள்
வெண்ணிலவை பாடிவிட்டோம்,,,
அதைவிடியும் வரை தேடி விட்டோம்,,,
மேகம் என்னும் திரைக் கூட்டம் மேற்கு வரை கடத்தி விட்டான்,,,
விடியும் வரை காத்திருந்தேன்,,,
விண்ணையே பார்த்திருந்தேன்,,,
என்னையே பார்த்தவள்,,,
எதற்கும்,
இன்று போய் நாளை வா என்றாள்,,,
இன்று கூட பார்த்திருந்திருந்தேன்,,,
இறங்கி வர ஆசைப்பட்டாள்,,,
வேகமாய் மேகம் என்று,
ஓடி வந்து திரையை போட்டான்,,,
ஒற்றை விழிமறைத்து ஓரமாய் அவள் பார்க்க,
வெட்ட வெளி பொட்டலிலே
காலை வரை காத்திருப்பேன்,,,
நித்தம் நித்தம் நான் பார்க்க, நினைத்து வந்த வேளையிலே,,,
சத்தம் போடாமல் அவளுக
மேகம், சடசடனு மழை பொழிந்துடுவான்,,,
ஒட்டு மொத்தமாய் நனைத்து விட்டு, என்னைப் பார்த்து அவள் சிரிக்க,,,
மேகமதும் விலகிவிடும்,,,
அவள் முகங்காண சோகமதும் பறந்து விடும்,,,
இப்படியே என் வாழ்வு இறுதி வரை ஓடி வர, உறுதியாய் உடனிருப்பேன் என்று சொல்லி மறைந்து விட
கண்டது தான் வானிலே அமாவாசை,,,✍🏻
😁🙏🏻💐


பாலா,,,,,


ஏக்கம்


இமை மூடிய நேரம்
பசுமையான நினைவு அலைகள்
முதலில் நீ நினைவில் வந்ததினால் வேறு நினைவுகள்  மறுக்கப்பட்டது!
மறுக்கப்பட்டது என் முன்னே! நினைவில் நிற்கும் நீ எங்கே?... அப்பா

       விஜி கல்யாணி


இன்னும் வீழ்ந்து கொண்டே இருக்கிறேன்!

உன் கூந்தல்
சூடுமென மலர் பறித்து
கடிது வந்தேன்!
உன் கூந்தல் மனம்
மிகுந்து விட முடியாமல்!
மலரது நறவு துறந்து போனதடி!

உன் விழிகள்
எத்தனை
அடி பள்ளமடி!
இன்னும்
வீழ்ந்து கொண்டே இருக்கிறேன்!

ஜோ.ரெக்ஸ்


இல்லறம் நல்லறம் ஆகக் குரல் கொடுக்கும் குறள்
இணைப்பு-பிணைப்பு

இல்வாழ்வு  மூலம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு
இணைப்பு
அன்பால்  ஒரு பிணைப்பு.

துணைநலம்-இணைநலம்

ஆணும் பெண்ணும்
இணையாய் அமைதல் இணைநலம்
வாழ்நாள்  முழுதும்
துணைநலம்-என்றும் வெல்லும் பலம்.

விதைகலன்-விளை நிலம்

இறைவன்  படைப்பின்  முறைவைப்பில்
ஆண்-விதைகலன்
பெண்-விளை நிலம்
மழலை-விளைபொருள்.


கு.ஜெயந்தி-சிதம்பரம்


Friday, 18 January 2019

காடு செழித்தால் நாடு செழிக்கும்

கானகமே வீடாக
குழந்தைகளே உலகமாய்
தினம் தினம் பயமே
வாழ்க்கையென்று
பல உயிர்கள் சிறிதென்றும் பெரிதென்றும்
வாழ்கின்றன
ஒவ்வொன்றிற்கும் பலவாறாய் சக்தி கொடுத்தவன்
சிலவற்றை பலகீனப்படுத்தி விட்டான்

சிலவற்றின் உயிரினமே
மாக்களிலும் மக்களாலும் அழிக்கப்பட்டு விட்டன

மனிதன் காட்டை எட்டா வரையில் செழித்திருந்தது

எட்டும் போது அழிந்திருக்கிறது

மனிதன்
காட்டை கூறு போடாமல் குறுக்கிடாமல்
இருந்தாலே
தாவரங்களும் உயிரினங்களும் செழித்திருக்கும்

காடு  செழித்தால்
நாடு செழிக்கும்
நாடு செழித்தால்
மக்களின் வாழ்வு செழிக்கும்

இறைவன்
சிலவற்றை அழகாய் படைத்தும்
ருசியாய் படைத்தும் விட்டான்

சில அழகுக்காக அடிக்கப்படுகின்றன
பல ருசிக்காக துரத்தப் படுகின்றன

துரத்தப் படுவதும்
விரட்டப்படுவதும்
எதற்காக இருந்தாலும்
பெண்ணினமும்
மானினமும் ஒன்று
தன்னை காத்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது

மரங்களை வைப்போம்
மழையைப் பெருக்குவோம்
காடுகளை வளர்ப்போம்
அங்குள்ள உயிர்களை பாதுகாப்போம்

தி.பத்மாசினி

நிழலாடும் ஆளுமை

நீண்டகால 

இடைவெளிக்குப்

பின்பானதொரு

சந்திப்பில் 


முந்தைய 

பயம் 

தயக்கம் 

தடுமாற்றம்

நான் குறித்த 

உன் மதிப்பீடு  


எல்லாம் கடந்து 

எளிதில் கேட்க முடிந்தது 

என்னால்


உன்னால் மறுக்கவும் முடிந்தது 


உன்னாலும்

என்னாலும் 

கடந்த பயணங்களில் மட்டும் 

இனி

நிழலாடும்

அவரவர் குறித்த

ஆளுமை


*பொன்.இரவீந்திரன்*

எது சிறப்பு?

சரிசெய்து 

வாழ்வதை விட

சரியான

செயலைச்

செய்து வாழ்வதே

வாழ்க்கையின்  

சிறப்பு..!கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..

நிலா


மாலை மயங்கும் நேரத்திலே

இருள் சூழும் வேளையிலே

மலர்கள் மலரும் வாசத்திலே

ஊரடங்கும் பொழுதினிலே

கீழ்வானம் மீதினிலே

அமைதியான முகத்துடனே

வெள்ளையன் ஒருவன்

கால்கள் இல்லாமல் ஓடி வந்தான்

கைகளில்லாமல் தவழ்ந்து வந்தான்பூமியில் இருளை நீக்கிவிட்டு

மக்களின் மனதில் இன்பத்தை கூட்டிவிட்டு

திருட்டுத் தொழிலை ஒழித்துவிட்டு

மனிதருள் இரக்கத்தை விதைத்து விட்டு

இலக்கியங்களில் கதாநாயகனாகி விட்டு

குழந்தைகளுக்கெல்லாம் அம்புலி ஆகிவிட்டு


பார்க்கும் போதே கண்ணைக் கவரும் 

அழகும் பெற்றுவிட்டு

பட்டும் படாமல்

தொட்டும் தொடாமல்

அல்லியை கண்டு விட்டு

அழகாக யாருக்கும் தொல்லையின்றி மேற்கில் மறைகின்றான்


அவனைப் போல நாமும்

நல்லன செய்து அமைதியாய் இருப்போம்


தி.பத்மாசினி

இல்லறம் நல்லறம் ஆகக் குரல் கொடுக்கும் குறள்கலை-தலை

வாழ்க்கை  ஒரு கலை
வாழ்வில் இல்லறம்
என்றும் அதன்  தலை
மனிதனைப் புனிதனாய் மாற்றும் மாண்பு
அதன்பின் ஏற்பது நோன்பு.

ஆண்-பெண்

வையம் செழிக்க
மானுடம் தழைக்கும்
ஆண்-பெண் என
இருபால் இறைவன்
படைப்பு.
இருபால் சிறப்புடன் இருக்க
வள்ளுவர்  வகுத்தமை  முப்பால்.
சிறப்பால் இருக்கிறது
கால எல்லைக்கு அப்பால்.கு.ஜெயந்தி
சிதம்பரம்


Thursday, 17 January 2019

என்று தணியும்இந்தமோகம

என்று தணியும்இந்தமோகம்
————————————
மகனுக்கு வரன் தேடினாள்
                                  தாய்....
அவனின் விவரம் கேட்டேன்
மணமுடித்த மறு ஆண்டே
மணந்தவள் இறந்ததினால்
மறுமணம் என்றாள்....
விசனமுற்றேன் விவரம்
                        சொன்னேன்
விவாகரத்தாகி ஓராண்டான
பெண்உண்டு பார்க்கலாமா
வார்த்தை முடியும் முன்.....
வெடித்து வந்தது வார்த்தை
சகிப்புத்தன்மைஇன்மையால்
பந்தம் முறித்திருப்பாள் பாவி
வேண்டாம் என்கிறாள் !!!
திருமணத்துக்கு ஒரேவாரம்
என்ற நிலையில்
குடிபோதையில் வண்டியை
ஓட்டி வீழ்ந்து மாண்டான் !!
வாழ்வுதரும் மனமுண்டா??
வினவினேன் ஆர்வம் மேலிட
ஐய்யய்யோ வேண்டாமே.!
தாலி பலமில்லாதவளைப்
படியேறவிட்டாலே
பாழாகிப்போகுமே என் வீடு
என்றாள் பதறியடித்தே!!
உயிர்ச்சோர்ந்துபோனேன்
ஓ.......மகாத்மாவே
என்னவாயிற்று உன் போதனைகளுக்கு??
எங்கே போனது உன்
பரிந்துணர்வுகள்?
பலவந்தத்தால் கற்பிழந்த
பாவையருக்கு வாழ்வுதர நீ
வேண்டியழைத்த இளைய
பாரதம் மண்ணுக்குள்போனதோ?
காலம்கடந்து முதிர்கன்னி
                                  யைக்
கைப்பிடித்தாலும் அவளும்
கன்னியாய் இருக்கணுமாம்!

குடிபோதையில் எவனோ
செத்தால் பெண்ணுக்குத்
தாலிபாக்கியம்வலுவில்லை
                                 யாம்!?
மண்ணுக்குள் போகும் உடலுக்கு உள்ள மதிப்பு
பெண்ணுக்கு இல்லையா?
பெண்என்பவள் பலவீனப்
பாண்டம் மட்டுமா??அவளுக்கு ............
ஊர் தரும் பட்டங்களும்
இலவசங்களுடன் சேருமோ
புவிபிளந்துபூதேவிவந்தாலும்
அவளிடமும்         கன்னிமைச்சான்று
கட்டாயம் கேட்கத்தான்
போகிறது இந்தக் புற்றுநோய் பீடித்த கேடுகெட்ட சமுதாயம்!

🌹🌹வத்சலா🌹🌹


தாய்மொழியின் அருமைதாய்மொழியின் அருமை இங்கு யாவருக்கும் தெரியவில்லை!
தாய்மொழியில் பெயர் வைத்திடவும்
யாருக்கும் மனசில்லை!
வேற்றுமொழி மோகமிங்கு யாவருக்கும் இருக்கிறது!ஆங்கிலமோகம்தான்
அரசு முதல் பட்டிதொட்டிவரை
தலைவிரித்தாடுகிறது!
மேலைநாட்டாரெலாம்
தாய்மொழியில் பயில்கின்றார்!சிந்தனையில் சிறக்கின்றார்!
இங்கே
தாய்மொழியில் படித்தாலே கேவலமாய் நகைக்கின்றார்!
அரசுபள்ளியெலாம்
ஆங்கிலவழியாகிறது!
தமிழ்வழியில் சேரும் கூட்டம் ஆங்கிலவழி பார்த்து மாறுகிறது!
தாய்ப்பாலாம் தமிழிருக்க டப்பா பாலாம் ஆங்கிலத்தை நாடுகிறது!
விளையாடும் பருவத்தில் ஆங்கிலத்தில் புரியாத பாடல்சொல்ல வற்புறுத்தப் படுகிறது!இதைத்தானே பெருமையாக சமூகம் கருதுகிறது!
ஆங்கிலமே அறிவு
குழந்தைக்கு ஆங்கிலவழியே ஏற்றதென நினைக்கின்ற சமூகத்திவ் சுயசிந்தனைகள் வளராது!,தமிழனாய்ப் பிறந்து தமிழை அறியாது வாழ்வதென்பது நடைபிணமாய் வாழ்வதைப் போன்றது! *என்னவளம்* *இல்லை நம்* *தமிழ்மொழியில்?*  *ஏன்கையை ஏந்தவேண்டும் அயல்மொழியில்*

ஒழுங்காய்ப் படிக்கவைப்போம்!
தமிழ்மொழியில்
சுயசிந்தனையை வளர்த்திடுவோம் குழந்தைகளுக்கு!

த.ஹேமாவதி
கோளூர்


மடுவா....?நத்தையின் சிறுமனம்
கொண்டு
தளர்ந்து கூட்டில்
சுருண்டு கொண்டு
கிடக்கவே விரும்பி
தத்தி தத்தி கூட
நகரந்திடவும்
முயலாது இருக்கையில்
வறுமை மனம்
கொள்ளாதே
என்றவரை
உருவத்தில் மடுவாய்
நான் கண்டாலும்
அவரூட்டிய
வினையூக்கி
விஸ்வரூபமாய்......

தங்கம்கம்சலவள்ளி


நன்றி சொல்லுகிறேன்! இந்நன்நாளிலே!

களனியிலே ஏர்பூட்டி!
ஏரோடு உடல் கூட்டி!
பத்துகால் பாய்ச்சலிலே!
பசி எனும் நோய் தீர்க்க!
பரணியதன் தேவைதனை!
படி அளக்கும் ஆண்டவனுக்கு நிகரானவனாய்!
வியர்வையினையும் உரமாக்கி!
நெல்மணி!...
என்
வீடு சேர்த்த உழவனுக்கும்!
உழவனுடன் கூடி கொடுத்த ஞாயிறுக்கும்!
ஞாயிறுடன் தோல் சேர்த்த காளையனுக்கும்!
நன்றி மறவா தமிழனின்
நன்றியினை உழவன்!.
ஊர் சேர்ந்து
பாடிடும் போது!
உணவு உண்ணும் நானும்!
நன்றி மறவா
அந்த உழவனுக்கு
நன்றி சொல்லுகிறேன்!
இந்நன்நாளிலே!

----இப்படிக்கு நான்.   ஜோ ரெக்ஸ்-------


காணும் பொங்கல்தமிழனின் பரந்த மனப்பான்மைக்கு
நல்ல சான்றாகும்
காணும் பொங்கல்!
விழியென்ற வாசலே உறவென்ற பாலம் அமைக்கும்!
ஞாயிறுதனக்கும்
மாடுகன்றுகட்கும்
அடுத்தடுத்து நன்றி
தெரிவித்த மகிழ்வோடு மூன்றாம்நாள் பயணத்திருவிழாதான்!
சொந்தபந்தங்களைத்
தேடிச்சென்று முகங்கண்டு மகிழ்வோம்!மூத்தவராயின் பாதம்பணிந்து ஆசிபெறுவோம்!இளையோரெனில் வாழ்த்துரைப்போம்!
குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்வோம்!மானிடச் சமுத்திரம் பாரடா!நீஅதன் ஒருதுளி தானடா!என்ற பாரதிதாசனின் வரிகளை உணரவைப்போம்!
நட்பை அன்பை உறவை வளர்க்கவே காணும்பொங்கல்
என்று முறைவைத்துக் கொண்டாடிய தமிழனுக்கு எங்கும் எதிலும் வெற்றியே!

த.ஹேமாவதி
கோளூர்


Wednesday, 16 January 2019

உயர்ந்த காதல்காதலில்லா உலகேது?
அந்த காதலிலே
உயர்ந்ததெது?
மண்ணுக்கும் உழவனுக்கும் இடையே உள்ளதே உயர்ந்த காதலாகும்!
உழவனின் காலடிப் பட்டாலே போதும் சிலிர்த்திடுவாள் நிலமங்கை!இது உழவனுக்கும் மண்ணுக்கும் மட்டுமே புரிகின்ற மண்ணின் அகத்திணை!
மண்பார்த்து உழவன் சிரிக்க
உழவன் காலடிபட்ட
மண்ணோ நெகிழ
காதல் மலரும்!
ஏர்முனையாலே காதலிக்கு சலியாது காதல்மடல் தீட்டிடுவான் கற்காத உழவன்!
நீராட்டி காதலியை குளிரப்படுத்தி
விதைநெல்களை விருந்தாகத் தந்திடுவான்!காதலியின் மேனிமுழுக்க பச்சைவண்ணப் பட்டுச்சேலையைப் போர்த்திடுவான்!மண்ணென்ற பெண்ணுக்கு உழவன் தாய்மைப்பேற்றினை அளித்திடுவான்!
யார்யாரோ மண்மீது நடந்தாலும் காதலனாம் உழவனின் நடையைத் தனித்து அறிவாள் நிலமங்கை!சத்தமே இன்றி உழவனும் அவளும் பேசும் உரையாடல்கள் ஏராளம்!ஆதலினால் சொல்கிறேன் இவ்வுலகில் *உயர்ந்த காதல்*
உழவன் மண்ணின்மேல் வைத்த காதலே!

த.ஹேமாவதி
கோளூர்


ஜல்லிக்கட்டு காளைநச்சுன்னு இருக்கும் காளை
ஜம்முன்னு ஓடும் காளை
துள்ளிப்பாயும் காளை
சிங்கம் போல சீறி பாயும் காளை
சிறுத்தைப் போல வேகமாய் ஓடும் காளை
திமிர் பிடித்த காளையை அடக்கிப் போடும் காளை
திமில் பிடித்த காளைக்கு பரிசு வாங்கி கொடுக்கும் கிளை
வாலைத் தொட்டால் வாரி அடிக்கும்
தன் எஜமானுக்கும் விசுவாசமாய் பரிசை
  வாங்கிக்  கொடுக்கும் காளை
கொம்பைத் தொட்டால் முட்டி மோதும் காளை
ஆயிரம் பேரை தம்மை உற்று நோக்க வைக்கும் காளை
ஆண்டு முழுதும் உழைத்து உழைத்து
இன்று மகிழ்ச்சியில் துள்ளும் காளை

தமிழரின் அடையாளம் காளை
தமிழன் வீரம் காளை
தமிழரின் உழைப்பு காளை
நம் வாழ்வோடு ஒன்றிய ஒன்று காளை
நம் வாழ்க்கையின் ஆதாரம் காளை
நிலத்தை அலங்கரிக்கும் காளை
நிஜத்தை உணர்த்தும் காளை
காளையைப் பெருமை செய்யவே
ஆண்மகனையும்காளை என்றே அழைக்கிறார்கள்


தி.பத்மாசினி


ஏறு தழுவுதல்


காலம் மாறலாம் ...ஆனால்
கனவுகள் மாறுமோ? அதன்
கனங்களும் குறையுமோ?
வங்கக்கரையோரம்.....
வந்ததே ஆழிப்பேரலை
கடலிலிருந்து கரைக்கல்ல..

கரைகாணா மனித ஆழிப்
                          பேரலையே!
ஜாதி அன்று ஜதிகள் சொல்
                           லவில்லை!
மதங்களன்று மத்தளம்
               கொட்டவில்லை!
ஏழையெவரும் எழுந்தோட
                               வில்லை!
பணம்படைத்தோரும் பதுங்கி நிற்கவில்லை!
கருவைத்தாங்கியவள்
கையில் சிசுவைஏந்தியவள்
கைப்பிடியில் பிஞ்சுகளை
இறுகப்பற்றியவள்
இறைவனைத்தேடும் அகவை
                                   யிலே
இருப்பவள் என எத்தனைப்
                                 பேர்
ஒன்று திரண்ட காரணம்
                     மறக்குமோ?
வீர இளைஞர் வாகைசூட
பின்புலமாய் நின்ற நிஜம்
                        மறையுமோ?
காவலர்கள் இரும்புகரங்கள்
துருவேறி நின்ற கதையும்
                      மறைந்திடுமோ
குளிர் காற்று தண்டுவடம்
                                 வரை
தாண்டவமாடிட நிஜமும்
                       மறையுமோ?
ஆண்மகன் பேதம் மறந்து
ஆள்தெரியா இருளிலும்
கண்ணியம் போற்றி..........
கண்களில் உயிரை ஏந்தி
தவமாய்த்தவமிருந்து
பெற்றுத்தந்தது விடுதலை
ஜல்லிக்கட்டுக்கா இல்லை
தமிழ்நாட்டுக்கா?தமிழனின்
தரத்தை தரையிலிட்டு
நசுக்க நினைத்த எத்தரின்
நாசகார எண்ணத்தை
நசுக்கிட எழுந்தவரின்
வாய்தனை உடைத்தெழும்
வீரம்படைக்குக் கிடைத்த
வெற்றியின் முழக்கமே
இன்று ஏறுதழுவுதலாய்,
மஞ்சுவிரட்டாய்
மாறுஜென்மம் எடுக்கவைத்
                         தான் என்
மானத்தமிழன்! பாரம்பரியத்துக்கு உயிர்
                         தந்த
தங்கத்தமிழன்! இன்று நாம்
நடத்தும் ஒவ்வொரு
நீகழ்வின் நிதர்சனமே
  தமிழ்வாழும் வரை உன்
பெயர் வஆழும்


சமூகத்திற்கு.....!ஒரு விண்ணப்பம்.ஏ... சமூகமே!
நீ உரம் பெறுவாய்
என்றால்
என் வளர்இள இலையைக் கூட
நானே வாட்டி
உந்தனுக்கு தழைச்சத்து
ஆக்குவேன்...
தழைய தழைய செழித்து வளர....!

நன்றியுடன் தங்கம்கம்சலவள்ளி


வலம் வா!உன்னைக் கேவலப்படுத்தும்
நபர்களின் முன்
உன்னை நீயே
அவலமாக உணராமல்
அவர்களேபோற்றும்படி
வலம் வா.....!
எழுதுக்குச்சியின்
கூர்முனைப் போல்
முனைப்புடன் செயல்படு....
காயம்பட்டாலும்
நியாயமாக....

தங்கம்கம்சலவள்ளி


எவருக்கு நன்றி கூற ஆசை?

எவருக்கு நன்றி கூற ஆசை?
காலணி அணிந்து
உன்னை மிதித்தவர்க்கு
நன்றி கூறு..

வெறுங்காலால் கூட
அடுத்தவரை மிதிக்கக்கூடாது என்று
எண்ணவைத்ததற்கு!

அப்பறம் உன் இஷ்டம்
என்று விலகிச் செல்பவர்க்கு நன்றி கூறு.

இதுவரை அவர்கள் விருப்பம் போல் நடந்து கொண்டபாதையை
மாற்றிக் கொள்வதற்கு
வழிவிட்டமைக்காக...

இக்கட்டான சமயத்திலும்
பதிலுக்குப் பதில்
என்று பேசும் நபர்க்கு
நன்றிகூறுங்கள்....
அவர்களுக்கு கடன்படா நிலையை உருவாக்கி
தந்ததற்கு..
உன்னை விட சிறியவர்
முன்னிலையில்
அவமானப்படுத்துபவர்களுக்கு நன்றி கூறுங்கள்...
தீர்வை நாளில் கூட
திடமுடன் நிற்கும்
நெஞ்சுரத்தை
ஏற்படுத்தித் தந்ததற்கு....
தூக்கிய கையே
பிறர் பொருட்டு
கீழே இறக்கிக்கூட
விடாமல் தூக்கிப் போட்டால்
அவர்களுக்கு ஆழமான நன்றியைத் கூறுங்கள்...
ஏனெனில்
அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும்
எழுந்து நிற்பதற்கும்
நடப்பதற்கும் வலிமையை வழங்கியதற்காக....
பத்திரிகை மட்டும் நீட்டி விட்டு அழைக்காமல் சென்றவர்களுக்கு
நன்றி கூறுங்கள்.....
சமுதாயப்பண்பிற்கு
மதிப்பளிக்கும் பக்குவம்
இன்னும் சிதையடையாமல் விட்டதற்கு..

பிறர் பொருட்டு பேசாது
வஞ்சிப்பவர்க்கு
நன்றி கூறுங்கள்.....
நீங்கள் அப்படி இருக்கக்கூடாது
என்று உங்களுக்கு
உணர்த்தியதற்கு....
உனக்காக சொல்
வாங்கி கொள்ளும்
நபர்க்கு நன்றி கூறாதீர்கள்
முடிந்தால் அவர்க்காக
சிலுவை சுமக்க நேரிட்டால்.....
தயங்காது சுமக்கதயாராகுங்கள்....
முன் கை நீட்டி
இனிப்பு வழங்கிடும்
நபர்களிடம்
மிகுந்த எச்சரிக்கையாக
இருங்கள்....
நாளையே அவர்
எட்டிஉதைக்கவும் கூடும்...
பலர் அறியநாகரிகம்
கற்று தருபவர்கள் தான்
தனிமையில்
ஆடு நனையுதேன்னு
ஆறுதல் அளிப்பர்.....


தங்கம்கம்சலவள்ளி


கற்பனைக் காதலி...!!!


தைப் பொங்கலில் தமிழ்ப் பொங்கல்தைமகளாம் அத்தைமகளே
தமிழினத்தை காக்க

ஒத்தையில் வா மகளே
வித்தைகளை நீ புரிந்து

ஆங்கில மோகமது
ஆண்டியையும் ஆள்கிறது

தமிழமுது பருகாமல்
தரணியில்  தமிழ் குழந்தைகள்

விந்தையான நிலைதான்
சந்தையில் நிற்கிறது

பாரதி கண்ட கனவுதான்
பாதியிலே நிற்கிறது

சாரதியாய் நீ வந்து
தமிழ் பாடி மகிழ்வூட்டு

தை மகளே அத்தை மகளே
தமிழ் பொங்கல் நீ பொங்கு

கவிஞர்.மு.இராஜேஷ்
புதுவை


தேர்தல்


ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அப்பா(வி)  ம(க்)களுக்கு
நடத்தும்
காதணி விழா.
    இரா. கோவிந்தராஜ்
     நன்னிலம்.


கலங்கரை விளக்கம்கல்லாலோ மண்ணாலோ கட்டப்படாமல் அய்யன் வள்ளுவனால்
சொல்லாலே
குறளாலே கட்டப்பட்ட கலங்கரைவிளக்கம்!
திசைமாறி போவோரை வாழ்வில் கரைசேர்க்கும் விளக்கமிது!
ஆயிரத்து முந்நூற்று முப்பது
படிக்கட்டுகளைக்
கட்டிவைத்துச் சென்றுள்ளார் செந்நாப்போதார்!
அந்த படிகளிலே
ஏறிச்சென்றிடுவோம்!
வாழ்வில் உயர்ந்திடுவோம்!
யாருடைய உதவியுமின்றி
தன்னந்தனி ஆளாகநின்று தெய்வப்புலவன் கட்டிவைத்த கலங்கரைவிளக்கமாம்
*திருக்குறளின்*
ஒவ்வொரு குறட்படியிலும் ஏறிச்சென்றிடுவோம்!
மலைமேலிருப்போர்க்கு மாங்காய்ப்பாலுண்டு
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ஞானத்தங்கமே!கேள்!
மாங்காய்ப் பாலும்
நமக்குத் தேவையில்லை
வள்ளுவனின் *முப்பாலே* போதுமடி ஞானத்தங்கமே!
முப்பாலைப் பருகிடவே தினமும்
திருக்குறள் என்ற கலங்கரைவிளக்கத்தின்
படிகளிலே ஏறிடுவோம்!ஒளிதீபமென மின்னிடுவோம்!

த.ஹேமாவதி
கோளூர்


அப்பா......                              

அஞ்சாரு வருசம் தவம் கெடந்து
ஆச மகன பெத்தெடுத்த
ஆம்பள புள்ளய ஆளாக்கி பாக்கனும்னு
உன் உசுர  வித்தெடுத்த.......

என் பிஞ்சு விரலால
உன் நெஞ்ச மாேதும் பாேது
உன்னாேட பஞ்சமெல்லாம்
பறந்தாெடிடுமுன்னு நெனச்சிருப்ப

ஏழைக்கு எதுக்குடா எட்டாத ஆசனு
பலபேரு பல்இழிச்சாலும்
என் மகன் பேரு
எட்டுதிசையும்  ஒரு நாள் ஒலிக்கும்
பாருனு வசனம் பேசி வந்துடுவ......

உன் பசிய பாதியாக்கி
என் உசுருக்கு மீதிய காெடுத்து
மிச்ச உடம்ப வளத்தியே.....

படிக்க கெரண்டு இல்லாத வீடு
புரண்டு கூட படுக்க முடியாத சிறிய கூடு
பருவ மழை பேஞ்சா
படகா மெதக்கும் வீடு
பங்குனி வெயில் அடிச்சா
பற்றி எாியும் காடு.........

சல்லட சட்டய நீ மாட்டிகிட்டு
சலவ சட்டய எனக்கு பாேட்டுவிட்டு
சார சாரயாய் கண்ணீா் விட்டியே.....

காெட்டுற மழையிலும்
காேணிய காெடையா  புடிச்சிக்கிட்டு
காேட்டு சூட்டு நா மாட்ட
காெத்தடிமையா கெடந்தியே.........

கட்ட விரலுல கையெழுத்து
நான் பாேட கூடாதுனு
கடன வாங்கி படிக்க வச்சியே....

நா கடுதாசி பாேட்ட உடனே
அழுக்கு ரூபாய அஞ்சாறு மடிப்பா
மடிச்சி அனுப்பி வச்சியே......

கண்ணுல ஓடும் காவிரிய
கையாள தாெடச்சிக்கிட்டு
கனவ மட்டும் சுமந்துகிட்டு
கவா்மெண்டு வேலைக்கு படிச்சி வந்தேன்...

பரீட்ச  காகிதத்துல  கண்ணீராலும்
விடை எழுதினேன்
சிாிச்ச முகத்துல எங்க அப்பாவ
பாக்கனும்னு
பட்டணத்துலேயே முதல் மாணவனா
படிச்சி முடிச்சி வந்தேன்......

சுத்துற காத்தாடி கீழ
சுழண்டு வரும் நாற்க்காலிக்கு மேல
சுகமா வேல செய்யுரேன்.......

உடம்பு வேர்வையில விதையா
முளைக்க வச்சி
மரமா என்ன வளத்து விட்ட
என் அப்பாவுக்கு......

அவரு கால்பட்ட மண்ணுல
கண்ணுக்கு அழகா காேட்ட கட்டி
மவராசன மனசாேட அணைச்சி
அடுத்த பிறவினு ஒன்னு இருந்தா
எனக்கு நீ புள்ளயா வேணும்னு
மழையா அழுதேன்.........

சிலம்பரசன்தங்கவேல்..........


Featured post

கவிஞன்

கவிஞனென்றால் காதலையும் கருத்துக்களையும் சொல்லிக்கொண்டு சிறு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனல்ல...!! அன்பையும் அரவணைப்பையும்..!!...

POPULAR POSTS