Header Ads Widget

Responsive Advertisement

அட்சயபாத்திரமாய், அமுதசுரபியாய் - வத்சலா

ஓராயிரம் பாடல்கள்
உனைவைத்து பாடினாலும்.....
நூறாயிரம் கற்பனைகள்
நீ தந்துகொண்டே இருக்கிறாய்!
அட்சயபாத்திரமாய்,
அமுதசுரபியாய் ,
உண்மையில் நீயொரு அதிசயமே!
அன்பு குறையினும் மிகையினும்
கேடுண்டாகுமாமே?
ஆனால் நீ வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
ஆர்வலராம் கவிஞர்க்கு நீ செல்வமே!
சில நாளில் சிந்திய வைரப் பாதையில்
சிங்காரமாய் நடைபயில்வாய்!
பல நாளில் உன் உறுதுணையாய்
பளிச்டும் ஒற்றை நட்சத்திரத்துடன்
வாய் ஓயாது கதைகள் பேசிக்கொண்டிருப்பாய்!
சில நாளில் வெண்பட்டுப்.  பஞ்சணையில் குழந்தையாய்
துயில்கொண்டிருப்பாய்!
சில நாட்கள் கருமேக காவலர்
புடைசூழ ராஐநடை பயின்றிருப்பாய்!
சில நாளில் மழைமேகங்களுடன்
கண்ணாமூச்சி ஆடியிருப்பாய்!
நிலவைப்பெண்ணாக்கி பாடுவார் சிலர்!
பெண்ணை நிலவாக்கி ஏங்குவார் சிலர்!
ஆனாலும் என்உறவாய் ,உயிராய் ,ஆவாகனம் செய்து வைத்தேன்.....
உன்னை எந்தன் நெஞ்சில்!
ஊருக்கொரு பொதுவிளக்காய் வைத்தான் இறைவன் வானில்
எங்கிருந்தபோதும் எனக்கானவள் நீ
எழில்கொஞ்சும் வெண்ணிலவே!
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
🌹🌹வத்சலா 🌹🌹