Header Ads Widget

Responsive Advertisement

பூவுலகின் பேரழகி



காதலியே காதலியே

நீ
என்னை கடலில்
தூக்கிப் போட்டாலும்
உன் காதலில் தான்
நான் மிதப்பேன்

என்னோடு நீ பயணம்
செய்யலாம்
கழற்றி விட மாட்டேன்

Fair ரான லவ்லி யான உன்
முகத்தில் இருந்துதான்
Fair and lovely க்கு
மூலப்பொருள் எடுக்கப்படுகிறது.

நீ சூடும் போதுதான்
அது மல்லிகை
பிறகு அதன் பெயரோ
மூலிகை

நீ வெண்மதி
உன்னால்
எனக்கு
இல்லை நிம்மதி

நீ
மட்டும்
சம்மதி
அப்போதுதான்
மகிழும் என்மதி

எனக்கு மிகவும்
பிடித்த மதம்
உன் சம்மதம்

எனக்குப் பிடிக்காத
தோஷம்
உணக்குப் பிடிக்கும்
ஜலதோஷம்

கவிஞர் புதுவைக் குமார்