நெஞ்சத்தில் நினைத்தேன், நினைவினில் வரைந்தேன்,,
நிஜத்தில் கண்டு விட்டேன் உன்னை,,
மஞ்சத்தில் துணையாய் மயங்கிய வேலை
மனதால்,
தந்து விட்டேன் என்னை,,,,
தொடர்ந்து நீங்கள் நடந்து வர, தொடரவிட்டேன் கண்ணை,,,
என் அருகினில் வந்து நிற்கையிலே
அமைதி கொண்டேன்
பெண்ணாய்,,,,
இளமை காலம் கனவில் வந்த காட்சியிது
இறைவா!
என் நினைவின் கோலம் பூர்த்தி செய்ய வந்திருக்கும் தலைவா,,,,
தோன்றிய நினைவு வாடவிடாமல் காத்து நின்றான் இறைவன்,,,,
என் தோற்றத்தில்
என்னை மாற்றி விடாமல் காத்து நிற்பான் வரும்
தலைவன்,,,,
பூவினும் மென்மை தலைவனைக் கண்டு கண்களும் தான் வியக்க,,,,
என் கோலத்தின் எதிரில் அவரின் கால்கள் தானாய் மெல்ல நடக்க,,,
நினைவின் படலம் முடிந்து விட பார்க்கும் படலம் தொடர்ந்து விட
என் ஆசைப் படலம் சேர்ந்து விட,,,
அவரிடம் கல்யாணம் நடந்து விட,,,,
ஆஹா என்ன இதுவும்,
அவர் வரமாய் வந்த கதையும்,
இறைவன் தரமாய் தந்த கதை தான்
கையணைக்கும்,தலைவனை காக்கும்
பெண் நான்!
பாலா