Header Ads Widget

Responsive Advertisement

விடிவு கிடைக்காத விரக்தியோ?

நேற்று வரை நீ
நிலைகொண்டிருந்த
கடற்கரை என் இதயத்தில்
கவிபாடியபடி இருந்தது!
ஒவ்வொரு முறையும்
நீ கரைத்தொட்டு திரும்புகையில் .......
விட்டுச்செல்லவதாய்
நினைத்து மெதுமெதுவாய்
ஈர்த்துக் கொள்ளும்
அலையின் நுரைகளில் உன்
தாய்மையல்லவோ
பதிவுசெய்யப்படது!  மணலின்
கரைதனில் நீ
விட்டுச்செல்லும்
வசீகர கிளிஞ்சல்கள்
உன்னால் எனக்கு
உவகையாய் அளிக்கப்பட்ட
சுங்கவரியோ என வியப்பேன்!
ஓம் காரத்தை
உள்ளடக்கும் வித்தையை
உனக்கு கற்றுத்தந்த
உத்தம ஆசிரியர் யாரோ? என ஆச்சரியமாய் மனதுக்குள் கேட்டபேன்!
உன்னைக்காணுந்தோரும்
குழந்தையாய் சிரித்த
குதூகல காலங்கள் நீர்க்
குமிழாய் மாறிப்போன
சோகம் அறிவாயோ நீ?
உப்புக்கரித்த போதும்
உவகையுடன் உன்னை
வாரிக்குடித்திருக்கிறேன்
வரும்நேரமெல்லாம்....!
ஆனால் இன்றோ......
கால்நனைக்கும் எண்ணம்
சிறிதுமின்றி
கலங்கியபடி பரிதவித்து நோக்குகிறேன்!
எத்தனையாய் மாசுகள்
அதை உன்னில் கரைக்கும்
அரக்கமனங் கொண்ட
கீழோரின் திருட்டுநினைவுகள்!
கிளைபரப்பிய
விஷச்செடியாய்
வேறூன்றி போயிற்றே!
இதைத்தான் ஆதங்கமாய்
கொட்டித்தீர்க்க
ஓடிவந்து கரையில் விழுகிறாயோ?
விடிவு கிடைக்காத
விரக்தியில் நீயே
வீணே திரும்புகிறாயோ?
🌹🌹வத்சலா🌹🌹