Header Ads Widget

Responsive Advertisement

தவம்

வாழ்ந்த காலத்தில்
தண்டவாளமாய் இருவரும்!
கூலிக்கு மேடு பள்ளம்  ஏறும்போது கால்ல  செருப்பில்லை-வேனலுக்கும்
மழைக்கும் அய்யாவின்
துண்டுதானே கவசமானது!
உணவு உறக்கத்துக்கு
வெத்திலை பாக்கு மருந்தானது!
இரவு எட்டுமணி செய்திதானேஉறங்கச்செல்லும்
மணியானது!
பிச்ச வாங்கனும் பொருளாதாரம் படிச்சவன்
அய்யாவிடம்!
அத்தனை சிக்கனம் ! ஒரே நாள் காய்ச்சல
ஓடிய வண்டி  தடம்புரண்டுச்சு!
அஞ்சாறு புள்ளைக
அனாதையானேனே
புலம்பி தவிக்கிறா அம்மா.....


விஜி கல்யாணி