புகழுக்கு ஒருவன் தான் என்பேன் அந்த புகழுடன் அவனை கண்டு கொண்டேன்,,,
கொடையில், வள்ளல் பாரி என்பேன்
அவன் கொடுத்ததினாலே
புகழென்பேன்,,,
நிலவுக்குப் புகழை யார் தந்தார்,,,
தினம் தினம் தேய்ந்து வளர்கிறது,,,
மலருக்கு புகழே மணம் தானே
மணத்தினில் நானும் கண்டு
கொண்டேன்,,,
புத்தனும்,மௌனத்தில்
புகழ் பெற்றார், நிலையாய் இன்றும் வாழ்கின்றார்,,,
சத்தியம் காத்த
காந்தியும் கூட சரித்திரப்
புகழைத்
தானடைந்தார்,,,
விதிக்கு விதி புகழ்மாற
விரும்பும்
புகழும் கிடைத்திடுமா?
பதிக்கு கிடைத்த புகழையுந்தான்
சதியும் மறக்க
நினைத்திடுமா!
புகழில் மயங்கும் மனிதரெல்லாம் விளக்கை பார்த்த விட்டில் போல்,,,
மயக்கம் தெளிந்து போன பின்னே உடுக்கை தேடிப் போனவரே!
பாலா,,,