Header Ads Widget

Responsive Advertisement

கண்புரை

எளியவர்கள் செய்கின்ற பிழை கண்ணில் தெரிகிறது,

வலியவர்கள் செய்கின்ற கொலை கூடத் தெரிவதில்லை.


ஏழைகள் வாங்குகின்ற கடன் மட்டும் தெரிகிறது,

ஏமாற்றும் செல்வந்தர் வாங்கும் கடன் தெரிவதில்லை.


இனத்தைக் காப்பதற்கு முனைபவர்கள் தெரிகிறார்கள்,

மதத்தை வளர்ப்பதற்கு அலைபவர்கள் தெரிவதில்லை.


விண்ணப்பித்து வீடுகட்டுவோர் குறை கண்ணில் தெரிகிறது,

ஏரியை ஆக்கிரமித்து வீடுகட்டுவோர் தெரிவதில்லை.


வடநாட்டில் வன்புணர முயன்றாலே தெரிகிறார்கள்,

தென்னாட்டில் பலாத்காரம் நடந்தாலும் தெரிவதில்லை.


புரை நிறைந்து விட்டது அனைவருக்கும் கண்களிலே,

புரை நிறைந்து விட்டது அனைவருக்கும் கண்களிலே,

திரைமட்டும் தெரிகிறது காட்சிகள் தெரிவதில்லை.


விரைவாகத் தேவை கண்மருத்துவர் இங்கே,

கண்புரை சிறப்பு மருத்துவர் இங்கே.


*சுலீ அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*