என் வீட்டில் வந்து விட்டால் என் மனைவி ஆகி விட்டால்
உன் வீட்டில் வேலையில்லை உணர்வுக்கு உரிமையில்லை என்கின்ற கட்டளையை எதிர்க்காமல் சகித்து நின்றால் அந்த மௌனம் சம்மதமில்லை.
முடியாது என்றாலும் முடிந்து தான் ஆக வேண்டும்
விடிகாலை எழுந்து நீ வீட்டு வேலை செய்யவேண்டும்
என்ற பிடிவாதம் பிடிப்பவரை மௌனமாகப் பொறுத்து நின்றால்
அந்த மௌனம் சம்மதமில்லை.
வீட்டு வேலை செய்தால் தான் சமத்துவம் என்று சொல்லி
வெளிவேலை செய்வதனை வேண்டுமென்றே குறைத்துச் சொல்லி
சரிசமமாய் இல்லையென்று வாதாடி நிற்கையிலே
அமைதியாக நிற்கின்ற ஆண் மௌனம் சம்மதமில்லை.
மனைவி வந்துவிட்டபின்னே மற்றவர்க்கு உரிமையில்லை
உறவுக்கு உதவுவது ஒருபோதும் நியாயமில்லை
என்கின்ற பேச்சுகளை மௌனமாக மனதில் வைத்தால் அது சம்மதம் என்று அர்த்தமில்லை.
*சுலீ. அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.