கலை-தலை
வாழ்க்கை ஒரு கலை
வாழ்வில் இல்லறம்
என்றும் அதன் தலை
மனிதனைப் புனிதனாய் மாற்றும் மாண்பு
அதன்பின் ஏற்பது நோன்பு.
ஆண்-பெண்
வையம் செழிக்க
மானுடம் தழைக்கும்
ஆண்-பெண் என
இருபால் இறைவன்
படைப்பு.
இருபால் சிறப்புடன் இருக்க
வள்ளுவர் வகுத்தமை முப்பால்.
சிறப்பால் இருக்கிறது
கால எல்லைக்கு அப்பால்.
கு.ஜெயந்தி
சிதம்பரம்