மாலை மயங்கும் நேரத்திலே
இருள் சூழும் வேளையிலே
மலர்கள் மலரும் வாசத்திலே
ஊரடங்கும் பொழுதினிலே
கீழ்வானம் மீதினிலே
அமைதியான முகத்துடனே
வெள்ளையன் ஒருவன்
கால்கள் இல்லாமல் ஓடி வந்தான்
கைகளில்லாமல் தவழ்ந்து வந்தான்
பூமியில் இருளை நீக்கிவிட்டு
மக்களின் மனதில் இன்பத்தை கூட்டிவிட்டு
திருட்டுத் தொழிலை ஒழித்துவிட்டு
மனிதருள் இரக்கத்தை விதைத்து விட்டு
இலக்கியங்களில் கதாநாயகனாகி விட்டு
குழந்தைகளுக்கெல்லாம் அம்புலி ஆகிவிட்டு
பார்க்கும் போதே கண்ணைக் கவரும்
அழகும் பெற்றுவிட்டு
பட்டும் படாமல்
தொட்டும் தொடாமல்
அல்லியை கண்டு விட்டு
அழகாக யாருக்கும் தொல்லையின்றி மேற்கில் மறைகின்றான்
அவனைப் போல நாமும்
நல்லன செய்து அமைதியாய் இருப்போம்
தி.பத்மாசினி