என்று தணியும்இந்தமோகம்
————————————
மகனுக்கு வரன் தேடினாள்
தாய்....
அவனின் விவரம் கேட்டேன்
மணமுடித்த மறு ஆண்டே
மணந்தவள் இறந்ததினால்
மறுமணம் என்றாள்....
விசனமுற்றேன் விவரம்
சொன்னேன்
விவாகரத்தாகி ஓராண்டான
பெண்உண்டு பார்க்கலாமா
வார்த்தை முடியும் முன்.....
வெடித்து வந்தது வார்த்தை
சகிப்புத்தன்மைஇன்மையால்
பந்தம் முறித்திருப்பாள் பாவி
வேண்டாம் என்கிறாள் !!!
திருமணத்துக்கு ஒரேவாரம்
என்ற நிலையில்
குடிபோதையில் வண்டியை
ஓட்டி வீழ்ந்து மாண்டான் !!
வாழ்வுதரும் மனமுண்டா??
வினவினேன் ஆர்வம் மேலிட
ஐய்யய்யோ வேண்டாமே.!
தாலி பலமில்லாதவளைப்
படியேறவிட்டாலே
பாழாகிப்போகுமே என் வீடு
என்றாள் பதறியடித்தே!!
உயிர்ச்சோர்ந்துபோனேன்
ஓ.......மகாத்மாவே
என்னவாயிற்று உன் போதனைகளுக்கு??
எங்கே போனது உன்
பரிந்துணர்வுகள்?
பலவந்தத்தால் கற்பிழந்த
பாவையருக்கு வாழ்வுதர நீ
வேண்டியழைத்த இளைய
பாரதம் மண்ணுக்குள்போனதோ?
காலம்கடந்து முதிர்கன்னி
யைக்
கைப்பிடித்தாலும் அவளும்
கன்னியாய் இருக்கணுமாம்!
குடிபோதையில் எவனோ
செத்தால் பெண்ணுக்குத்
தாலிபாக்கியம்வலுவில்லை
யாம்!?
மண்ணுக்குள் போகும் உடலுக்கு உள்ள மதிப்பு
பெண்ணுக்கு இல்லையா?
பெண்என்பவள் பலவீனப்
பாண்டம் மட்டுமா??அவளுக்கு ............
ஊர் தரும் பட்டங்களும்
இலவசங்களுடன் சேருமோ
புவிபிளந்துபூதேவிவந்தாலும்
அவளிடமும் கன்னிமைச்சான்று
கட்டாயம் கேட்கத்தான்
போகிறது இந்தக் புற்றுநோய் பீடித்த கேடுகெட்ட சமுதாயம்!
🌹🌹வத்சலா🌹🌹