போகி என்றால்
நம்முள் இருக்கும்
ஆணவத்தை போக்கி
வன்மத்தை போக்கி
தீய எண்ணங்களை போக்கி
கர்வத்தை போக்கி
இயலாமையை போக்கி
தன் சுயத்தை போக்கி
அறியாமையை போக்கி
மனதிலிருக்கும் மாசை போக்கி
பயம் என்ற விடத்தை போக்கியும்
வாழ்வோம் வளமாய்
போக்கி போக்கியென்று வேகமாக உச்சரித்தால்
அது போகியாகும்
தி.பத்மாசினி