சுகங்களை அள்ளித்தரும் தையென்ற சுறவமே சதுராடி வருகின்ற
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமே!
வெல்லப் பொங்கலென வாழ்வை இனிக்கச் செய்யவே வருகை தருகிறாய்!
கன்னலைச் சேர்த்துக் கொண்டு
மஞ்சளின் மணத்தோடு
புதுப்பானைகளின்
சங்கமத்தோடு
புதுஅறுவடை நெல்லோடு
பொங்கலோ பொங்கலென்ற குலவைச் சொல்லோடு
வாசலிலே வண்ணங்களைக் கோலமாக்கி
எண்ணங்களில்
மகிழ்ச்சியை ஊற்றாக்கி
உலகத்தமிழர் யாவருடைய இல்லங்களிலும் பிறக்கின்ற புத்தாண்டே தித்திக்கும் பொங்கலெனப் பெயர்பெற்ற தமிழரின் புத்தாண்டே வருக வருக அனைவருக்கும் நல்வாழ்வு தருக!
த.ஹேமாவதி
கோளூர்
💐💐💐💐💐💐💐💐