Header Ads Widget

Responsive Advertisement

பேசு கண்ணே பேசு


*பேசு* கண்ணே பேசு
கேட்க ஆவல்கொண்டேன்பேசு!
பகர்வாய் கண்ணே *பகர்*
தகவல் அனைத்தும் பகர்!
கேட்கும் வினாவுக்கு விடைதனைச் *செப்பு!*
வகைப்படுத்திக் கூறு கண்ணே *கூறு!*
பொருள்பொதிய எனக்கு உரைத்திடு கண்ணே *உரை!*
செவிகளின் ஏக்கம்தீர நயமாக *நவில்* கண்ணே!
யாழாய் குழலாய் இன்னிசையாய் என்னிடம் இயம்பு கண்ணே *இயம்பு!*
உன்னெண்ணத்தில்
இருப்பதை கண்ணே நீ எனக்கு தெரிவித்திட பறை கண்ணே *பறை!*
தெளிவாக உன்கருத்தை என்னிடம் *சாற்று!* கண்ணே!
முன்னோட்டமாய் உன் எண்ணத்தை நீ என்னிடம் நுவல் கண்ணே *நுவல்!*
கேட்க கேட்க இனிமையைத் தூண்டும்படி
 அழகாய் நீ மனனமாய் ஓதிடு கண்ணே *ஓது!*
ஒன்றுவிடாமல் எல்லா கருத்துகளையும் கண்ணே கழறு என்னிடம் கனிந்தே *கழறு!*
உன்பேச்சைக் கேட்க ஆவலாயுள்ள என்னை கரை கண்ணே *கரை!*
உன் கரைதலில் கரைந்து போகிறேன் கண்ணே!
காத்திருக்கிறேன் கண்ணே எனக்கொரு செய்திகூட இல்லையா என்னிடம் விளம்புவதற்கு!
*விளம்பு!* கண்ணே விளம்பு!

த.ஹேமாவதி
கோளூர்