எனக்காக
பிறந்ததோ
மார்கழி என்னவோ?
தெரியவில்லை,,,
கணக்காக எழுந்து காலையில் குளித்து பிள்ளையார் கோவிலில் பிடியளவு பொங்கல்,,,
காலை உணவாய் கடந்தது ஒரு மாதம்,,,
செல்வந்தர் மகளொருத்தி சேர்ந்தென்னோடு,,
வாங்கிய பொங்கலை பாரியைப் போல் வாரி வழங்கி விட்டாள் மாதம் முழுதும்,,,,
இன்றே இப்படம் கடைசி என்பது போல், முடிந்தது மார்கழி,,,,
தை பிறந்தால்
வழி பிறக்கும் என்றார்கள்.
மதில் மேல் பூனையாயிருக்க,,,,
"எண் அரு நலத்தினாள் இணையவள் நின்றூழி
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட நானும் நோக்கினேன் அவளும் நோக்கினாள் "
கருணைப் பார்வை கொண்ட அவள் காலங்களில் வசந்தமாய் "தைபிறந்தால் வழி பிறக்கும் "
வா என்றழைத்து வாசலில் பலர் வரவேற்க
புத்தாடை கொடுத்து ,
புதுத்தெம்பூட்டி,,, பட்டாடை எடுக்க அச்சாரம் போட்டது போல்,,,,
பலவேசம் போட வைத்து அழகு பார்க்க,,,,
எக்காலமும் மாறாது முக்காலமும் உணர் தவனாய்,,,, தட்டாமல் கை பிடித்தேன்,,,
செல்வந்தர்
தள்ளாத போதினுலும், செல்வம் இல்லாத போதினிலும்,,,,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழிகள் எடுத்தியம்பும் பொருள் பலிக்க, அரசும், ஆலும் போல் அரசாள இணைந்தோம். செல்வப் பொங்கலும் எனது செல்லப் பொங்கலும் சேர்ந்திங்கு இணைந்தது போல் இணையட்டும் பிரியத்தால் செல்வமும், செல்லமும் இத்தைத் திருநாளிலே!
வாழ்க வளமுடன்!!
பாலா