மலர்வது ஒன்று
உண்டென்றால்
உதிர்வது ஒன்று
உண்டுதானே.....
மலரும்
நட்பு கூட இங்கே
உதிருமா
உதிரும் தான்.....
உதிராமலிருக்க
காகித மலர்கள்
என்போமா நட்பை....
கால போக்கில்
கலர் மாறி போகுமே
காகித மலர்கள்....
நினைத்திருக்கும்
நிலைத்திருக்கும்
நட்பு மலர்கள் கூட
கால போக்கில் காலம்
செல்ல செல்ல
உதிரும் தானே
மெல்ல மெல்ல....
மலர்கள் உதிர்ந்தாலும்
அதன் சருகுகள்
இதய அறைக்குள் வைத்து
காப்பாற்றபடும்
இனிய நினைவுகளால்
போற்றப்படும்.....
உண்மைதானே நண்பா
உண்மையுடன்
கோ.இரவிக்குமார்