Header Ads Widget

Responsive Advertisement

வண்டுகள் எங்கே?


மேல்நிலை மாடத்தில் நின்றிருந்தாள் சீதை!

கீழே நடந்துச் சென்றிருந்தான் நாயகன் இராமன்!

ஒருகணம்

ஒரேஒருகணம்

நாயகனின் விழிகளும் நாயகியின் விழிகளும் சந்தித்தன!சந்தித்தவேளையில்

சிந்திக்காமலேயே

இதயங்கள் இரண்டும் காதலிலே வீழ்ந்தன

சிலைகளாய் மாறினர் இருவரும்

சுற்றிலும் இருப்பவர்களை மறந்து!

மௌனத்தில் அங்கே அரங்கேறிய

காதலில் விழிகளே

பெரும்பங்கு வகித்தன!

திடீரென ஆங்கே

வண்டுகளின் ரீங்காரச் சத்தம்

கேட்டனர் சுற்றிலும் இருந்தவர்கள்!

கேட்டவர்கள் அதிசயித்தனர்!

கண்களில் காணாத

வண்டுகள் ஆனால்

காதுகளில் கேட்கின்ற சத்தம்!

புரியாமல் மற்றவர்கள் முழிக்க

காதல்வயப் பட்ட

இருவரோ புன்னகைத்தனர்

காரணம் புரிந்ததால்!

சீதையின் விழிகள்

இராமனைக் கண்டதும்

தாமரையாய் மலர

தாமரையை மொய்க்கும் வண்டுகளாய் மாறின இராமனின்

விழிகள்!

அந்த வண்டுகளின்

ரீங்காரத்தை  கேட்கமட்டுமே முடிந்தது மற்றவரால்!பார்க்கமுடியவில்லை!

ஆனால் விழிகள் வண்டுகளாய் மாறியவிந்தையை

அறிந்த இருவரோ

தங்களுக்குள் நகைத்தனர்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*