ஐந்து கிலோ அரிசி இலவசம் என்றால்
ஐந்து மணி நேரம் வரிசையில் நிற்பார்.
இலவசமாய் பணம் கிடைக்கிறதென்றால்
இலட்சாதிபதி கூட இடையினில் நுழைவார்.
இலவசங்களை எதிர்ப்பவரை எல்லாம்
எதிரிகளாகவே நினைக்கவும் செய்வார்.
இலவசம் என்பது உரிமையாய்ப் போனது,
இலவசம் இல்லையேல் வாழமுடியா தானது.
*ஆனால்*
இலவசமாய் அறிவுரை கிடைக்கிறதென்றால்
ஏனோ ஏற்க மனம் மறுக்கிறது.
இலவசமாய் கிடைக்கும் கல்வியின் மதிப்போ நீரினில் இட்ட கோலம் ஆகிறது.
செலவு செய்தால் மட்டும் அறிவுக்கு மதிப்பா?
இலவசமாய் கிடைக்கும் பொருளுக்கு மதிப்பா?
இது எதிரா? புதிரா?
புரியாத புதிரா?
புரியாமல் தவிப்பதே என் வழக்கமாய்ப் போனது.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*