அரிச்சுவடி கற்றுத்தந்தவரை
மறக்க நேர்ந்தாலும்
அரிச்சுவடி
மறப்பதில்லை....
பிரம்படி வந்தவரின்
பாடம்
மறப்பதில்லை
அவர் உருவப்படம்
மறந்தாலும்...
வடக்குத் தெற்கு மறந்தாலும்
வரைபடம் மாட்டி
வைத்திருந்த
திசை மறப்பதில்லை...
கைப்பிடித்து
எழுதிய கை
மறக்க பட்டாலும்
எழுதும் எழுத்தில்
அவர் நினைவு
ஒட்டித்தான் வருகிறது.....
காலவோட்டத்தில்
புதுமைகளைச்
சந்திக்கும்போது
நாளை ஆசிரியரிடம்
கேட்டுக் கொள்ளலாம்
என்ற நினைப்பு
வாமனனாய்
இருக்கத்தான்
செய்கிறது...
தங்கம்கம்சலவள்ளி