கூட்டை விட்டு
வெளியே வரும்
பறவைக்கே
இரை கிடைக்கிறது....
பூனை இருக்கும்
வீட்டில் கூட
எலி தன் இனத்தைப்
பெருக்குகிறது....
காக்கா கூட்டிலும்
குயில்
தன் முட்டையை
இடுகிறது.....
அடுத்த வீடு
பகையென்றாலும்
மரக்கிளை
எட்டித்தான் பார்க்கிறது....
வடக்குத் தெரு
நாய்க்குட்டி
தெற்குத் தெரு
மனிதர்க்கும்
காவல் நிற்கிறது....
மேகத்தை விட்டு
சிப்பியில் விழுந்த
மழைத்துளிகள் தான்
நல்முத்துகளாகிறது....
விடு தயக்கத்தை!
உடை தடையை!
எடு இலக்கை!
வகு பாதையை!
மீறு தோல்வியை?
அடை வெற்றியை!
நாட்டு கொடியை!
தங்கம்கம்சலவள்ளி