பாரதி
சொன்னான்
அன்று
இனி எமக்குத்
தொழில் கவிதை
என்று..
இளைய தலைமுறை
எண்ணத்தயங்கும்
வேளையில்
எண்ணற்ற
மக்களின்
வண்ணமயமான
வாழ்க்கையை
மாற்ற
உலகில் பசியைப்போக்க
பசுமையை
உருவாக்க
பச்சிளம்
குழந்தைக்குப்
பாலுட்டும் போதே
வேளாண்மை
எனும்
விவசாயத்தை
வில்
வித்தையைப்போன்றே
நெல் வித்தை
என்னும்
சொல் முத்தை இளையப்பருவத்தின்
மனதிலும்
விடலைப் பருவத்திலும்
விதைத்து விட்டால்
மலையென
வரும்
துயரமெல்லாம்
மக்களின்
பனிபோல் விலகி
துணிவோடு பழகிடும்
விவசாயின்
உடல்
முழுவதும்
வரும்
வியர்வைத்துளி
வேளாண்மையில்
என்னும்
உழைப்பில் உதிர்ந்தவை
ஆகட்டும்..
என்ன வளம்
இல்லை
இந்த திருநாட்டில்
ஏன் கையை நீட்ட
வேண்டும் வெளிநாட்டில்
என்னும்
பாடல்
இளைய சமூகம்
இன்பமாய்
பாடி
இனிமையாய்
ஆடி
எட்டுத்திக்கும்
கொட்டிக்கிடக்கும்
நெல் மணிகளுக்குத்
தாய் மடியாய்
நம் வேளாண்மை
எனும்
விவசாயத்தை தாய்மண்
நமக்கும்
நம் தேசத்திற்கும்
வெறும்
வயிற்றுப்பிழைப்பு மட்டுமல்ல
நம் வாழ்நாள் சரித்திரத்தில்
விவசாயின்
வேளாண்மை
வீரத்தின்
அடையாளமாய்
நம் நாட்டின்
இதயத்துடிப்பாய்
என்றும்
துடிக்கட்டும்..
இளைஞர்களின்
வேலையில்லா
திண்டாட்டத்தை
ஒழிக்க வேளாண்மையை
வளர்க
இனி நாம்
செய்வோம்
வேளாண்மை
எனும் வீரிய
வித்தை
நம் சொத்தாகவும் சொந்தமாக
இரத்தத்தின் இரத்தமாய்
கலந்து விதைப்போம்
விவசாயத்தை..
வறுமை என்னும்
ஓடை ஒழியட்டும்
வசந்தம்
என்னும் வாடை
மலரட்டும்
ஆதலால்
இனி
எமக்குத்தொழில்
வேளாண்மை
என்று மார்தட்டி
பாரத முழுக்க
பறைசாற்றுவோம்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..