Header Ads Widget

Responsive Advertisement

அப்பா......



                              

அஞ்சாரு வருசம் தவம் கெடந்து
ஆச மகன பெத்தெடுத்த
ஆம்பள புள்ளய ஆளாக்கி பாக்கனும்னு
உன் உசுர  வித்தெடுத்த.......

என் பிஞ்சு விரலால
உன் நெஞ்ச மாேதும் பாேது
உன்னாேட பஞ்சமெல்லாம்
பறந்தாெடிடுமுன்னு நெனச்சிருப்ப

ஏழைக்கு எதுக்குடா எட்டாத ஆசனு
பலபேரு பல்இழிச்சாலும்
என் மகன் பேரு
எட்டுதிசையும்  ஒரு நாள் ஒலிக்கும்
பாருனு வசனம் பேசி வந்துடுவ......

உன் பசிய பாதியாக்கி
என் உசுருக்கு மீதிய காெடுத்து
மிச்ச உடம்ப வளத்தியே.....

படிக்க கெரண்டு இல்லாத வீடு
புரண்டு கூட படுக்க முடியாத சிறிய கூடு
பருவ மழை பேஞ்சா
படகா மெதக்கும் வீடு
பங்குனி வெயில் அடிச்சா
பற்றி எாியும் காடு.........

சல்லட சட்டய நீ மாட்டிகிட்டு
சலவ சட்டய எனக்கு பாேட்டுவிட்டு
சார சாரயாய் கண்ணீா் விட்டியே.....

காெட்டுற மழையிலும்
காேணிய காெடையா  புடிச்சிக்கிட்டு
காேட்டு சூட்டு நா மாட்ட
காெத்தடிமையா கெடந்தியே.........

கட்ட விரலுல கையெழுத்து
நான் பாேட கூடாதுனு
கடன வாங்கி படிக்க வச்சியே....

நா கடுதாசி பாேட்ட உடனே
அழுக்கு ரூபாய அஞ்சாறு மடிப்பா
மடிச்சி அனுப்பி வச்சியே......

கண்ணுல ஓடும் காவிரிய
கையாள தாெடச்சிக்கிட்டு
கனவ மட்டும் சுமந்துகிட்டு
கவா்மெண்டு வேலைக்கு படிச்சி வந்தேன்...

பரீட்ச  காகிதத்துல  கண்ணீராலும்
விடை எழுதினேன்
சிாிச்ச முகத்துல எங்க அப்பாவ
பாக்கனும்னு
பட்டணத்துலேயே முதல் மாணவனா
படிச்சி முடிச்சி வந்தேன்......

சுத்துற காத்தாடி கீழ
சுழண்டு வரும் நாற்க்காலிக்கு மேல
சுகமா வேல செய்யுரேன்.......

உடம்பு வேர்வையில விதையா
முளைக்க வச்சி
மரமா என்ன வளத்து விட்ட
என் அப்பாவுக்கு......

அவரு கால்பட்ட மண்ணுல
கண்ணுக்கு அழகா காேட்ட கட்டி
மவராசன மனசாேட அணைச்சி
அடுத்த பிறவினு ஒன்னு இருந்தா
எனக்கு நீ புள்ளயா வேணும்னு
மழையா அழுதேன்.........

சிலம்பரசன்தங்கவேல்..........