கல்லாலோ மண்ணாலோ கட்டப்படாமல் அய்யன் வள்ளுவனால்
சொல்லாலே
குறளாலே கட்டப்பட்ட கலங்கரைவிளக்கம்!
திசைமாறி போவோரை வாழ்வில் கரைசேர்க்கும் விளக்கமிது!
ஆயிரத்து முந்நூற்று முப்பது
படிக்கட்டுகளைக்
கட்டிவைத்துச் சென்றுள்ளார் செந்நாப்போதார்!
அந்த படிகளிலே
ஏறிச்சென்றிடுவோம்!
வாழ்வில் உயர்ந்திடுவோம்!
யாருடைய உதவியுமின்றி
தன்னந்தனி ஆளாகநின்று தெய்வப்புலவன் கட்டிவைத்த கலங்கரைவிளக்கமாம்
*திருக்குறளின்*
ஒவ்வொரு குறட்படியிலும் ஏறிச்சென்றிடுவோம்!
மலைமேலிருப்போர்க்கு மாங்காய்ப்பாலுண்டு
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ஞானத்தங்கமே!கேள்!
மாங்காய்ப் பாலும்
நமக்குத் தேவையில்லை
வள்ளுவனின் *முப்பாலே* போதுமடி ஞானத்தங்கமே!
முப்பாலைப் பருகிடவே தினமும்
திருக்குறள் என்ற கலங்கரைவிளக்கத்தின்
படிகளிலே ஏறிடுவோம்!ஒளிதீபமென மின்னிடுவோம்!
த.ஹேமாவதி
கோளூர்