தாய்மொழியின் அருமை இங்கு யாவருக்கும் தெரியவில்லை!
தாய்மொழியில் பெயர் வைத்திடவும்
யாருக்கும் மனசில்லை!
வேற்றுமொழி மோகமிங்கு யாவருக்கும் இருக்கிறது!ஆங்கிலமோகம்தான்
அரசு முதல் பட்டிதொட்டிவரை
தலைவிரித்தாடுகிறது!
மேலைநாட்டாரெலாம்
தாய்மொழியில் பயில்கின்றார்!சிந்தனையில் சிறக்கின்றார்!
இங்கே
தாய்மொழியில் படித்தாலே கேவலமாய் நகைக்கின்றார்!
அரசுபள்ளியெலாம்
ஆங்கிலவழியாகிறது!
தமிழ்வழியில் சேரும் கூட்டம் ஆங்கிலவழி பார்த்து மாறுகிறது!
தாய்ப்பாலாம் தமிழிருக்க டப்பா பாலாம் ஆங்கிலத்தை நாடுகிறது!
விளையாடும் பருவத்தில் ஆங்கிலத்தில் புரியாத பாடல்சொல்ல வற்புறுத்தப் படுகிறது!இதைத்தானே பெருமையாக சமூகம் கருதுகிறது!
ஆங்கிலமே அறிவு
குழந்தைக்கு ஆங்கிலவழியே ஏற்றதென நினைக்கின்ற சமூகத்திவ் சுயசிந்தனைகள் வளராது!,தமிழனாய்ப் பிறந்து தமிழை அறியாது வாழ்வதென்பது நடைபிணமாய் வாழ்வதைப் போன்றது! *என்னவளம்* *இல்லை நம்* *தமிழ்மொழியில்?* *ஏன்கையை ஏந்தவேண்டும் அயல்மொழியில்*
ஒழுங்காய்ப் படிக்கவைப்போம்!
தமிழ்மொழியில்
சுயசிந்தனையை வளர்த்திடுவோம் குழந்தைகளுக்கு!
த.ஹேமாவதி
கோளூர்