Header Ads Widget

Responsive Advertisement

எல்லைகளைக் கடந்தவன்

சாதீய எல்லைகளை

அசாதரணமாய்க் கடந்தாய்!

தேசிய உணர்வலையைக் கவிதையாலே பரப்பினாய்!

எளிமை என்ற அழகுக்குள் தமிழை புகுத்தி பாமரனும் புரியும்வண்ணம் கவியாத்துத் தந்தாய்!

பரந்தவானாய் மனங்கொண்டு

விரிந்த எண்ணம் 

ஒளிரவிட்டு

நீபாடிய யாவும்

சாகாவரம் பெற்றன

உன்னைப் போல்!

ஆம்.பாரதியே

எத்தனை யுகங்கள்

கடந்தாலும் என்ன

எவ்வளவு எல்லைகள் மிகுந்தாலும் என்ன

அனைத்தையும் கடந்தவன் நீ!காலத்தை வென்றவன் நீ!


*த.ஹேமாவதி*

*கோளூர்*