Header Ads Widget

Responsive Advertisement

உயிர்த்து வா நீ பாரதீ, எம்மை உயர்த்த வா நீ பாரதீ.


மீண்டும் உயிர்த்து வா பாரதீ

எம்மை உயர்த்தவா பாரதீ.


சந்தர்ப்பவாதிகள் தன் சதிகாரப் போக்கினின்று எம்மைக் காக்கவா பாரதீ.


மதம் பிடித்து அலைகின்ற மதவாதிகளில் நின்று

எம்மைக் காக்கவா பாரதீ.


மதசார்பின்மை பேசுகின்ற போலிகளில் நின்றும் எம்மைக் காக்கவா பாரதீ.


தேசியம் போற்றிய நல்லுள்ளம் நலிந்து சாதியம் நாளும் தழைக்கிறது பாரதீ.


தர்மத்தைக் காத்திட பத்திரிகை கண்டாய் நீ,

பத்திரிகை தர்மம் இன்று பரிதாபமாய் பாரதீ.


உரிமைக்காய் குரல் கொடுத்தாய் பத்திரிகையில் அன்று நீ,

உரிமைகேட்டால் நிந்திக்கிறதே

பத்திரிகைகள்  இன்று பாரதீ.


கங்கை இங்கே வரவேண்டும் என்றாய் நீ, காவிரியைக் கூட விடமாட்டேன் என்கிறார்,

உயிர்த்து வா நீ பாரதீ.


உயிர்த்து வா நீ பாரதீ,

எம்மை உயர்த்த வா நீ பாரதீ.


*சுலீ அனில் குமார்

*கே எல் கே கும்முடிப்பூண்டி