Header Ads Widget

Responsive Advertisement

நம்பிக்கை


“அவன் கூப்பிட்டால்

நீ ஏன் போனாயோ?” எனக்

கேட்கும் அபத்தசமூகமே🤛

சாலையில்போய்கொண்டிரு

                           ந்தவளை கூப்பிட்டா அவள் போனாள்?

எத்தனை நம்பிக்கையை அவன் விதைத்திருப்பான்? எத்தனைமாதம் காய்நகர்த்தி

                           இருப்பான்?

எத்தனை வேஷம்போட்டிருப்

                                    பான்?

அவள் நம்பிக்கையைப்பெற?

எனில்நம்பிக்கைக்குரியவர்

                                    யார்?

தோழனா?காதலனா? தகப்பனா? கணவனா?

இவ்வுறவுகளிலெத்தனைபேர்

இச்சித்தே பெண்ணை

பட்சித்திருப்பார்கள்.........? 

அறியாயோஅபத்தசமூகமே?

இரவுபணிமுடித்து முகமறியா

             -தவன்ஆட்டோவில்,

இளவிடியலில்ஊர் திரும்ப

அழைப்பு வாகனத்தில்......

தூரத்தே தனித்துநிற்பவனை

பெண்சலனமின்றிகடந்து

போகிறாளேஅது நம்பிக்கை; 

வெறும் நம்பிக்கை மட்டுமே!

“உன்னையார்நம்பிபோகச்

                           சொன்னது”

என வினவும் அபத்தசமூகமே

நீ வேண்டுவதென்ன?

விடிந்தபின்பும் படுக்கையில் 

பெண்கிடக்கவேண்டுமோ?

அதுவும் அகத்திருப்போர்

நம்பிக்கையானோராய்

இருந்தால்மட்டுமேசாத்தியம்

பெண்ணைத்தனியே சென்னைக்கனுப்பிவிட்டு

கிராமத்தில் நிம்மதியாய்த்

தூங்கும் தகப்பனின் நம்பிக்

                                       கை

அண்ணன்தம்பியின் நம்பிக்

                                      கை

யாரோ ஓர் அப்பா,அண்ணன்

                                  தம்பி

அவளைச்சுற்றியிருப்பார்;

அவள்பத்திரமாயிருப்பாள்

எனும் நம்பிக்கையில்........

பெண்குழந்தையைகண்டால்

போற்றிப் கொண்டாடி வாரி

எடுத்து முத்தமிடமுடியாத

சூழலுக்கு ஆண்தள்ளப்பட்டு

இருப்பது ஆணின் தவறே!

தனியொரு ஆண் அருகில் 

தனியொரு பெண் நிற்கவே

அஞ்சுகிறாள் எனில்.........

அதுவொரு நல்ல ஆணுக்கு

எத்தனை இழுக்கு!வேதனை

பெண்ணே! இடம்பொருள்

ஏவல்அறிந்துநடக்கப்பழகு!

உன் உள்ளுணர்வுசொல்வது

கேட்டு நடக்கப் பழகிடு!

எல்லைத்தாண்ட முயலுமுன்

துள்ளியெழுந்து தள்ளியே

நடக்கப்பழகிடு!

ஒழுக்கமென்பது அடுத்தவர்

பார்க்கும் வரையல்ல

மனதோடு பிணைந்திருப்பது

இதைஉணர்ந்துநடக்கப் பழகிடு!! உலகமேத் தூண்டி

விட்டாலும் உன் எல்லையை

நீயே நிர்ணயிக்கப்பழகு!

தனிமனித ஒழுக்கத்தின் .....

தன்னிகரில்லா பெருமையை

உணர்ந்து நடக்கப்பழகிடு!!!


வருத்தத்துடன் .....வத்சலா😔😔