எத்தனை பேர் வந்தார்கள்?
எம் பாரதி போல் யாருண்டு!
விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொண்டார்,,,
அதில், புரட்சி
தந்தவராய்
வெறுமை
கண்டார்,,,
உறவுகளெல்லாம் பழி சொல்லும்
உளியாக்கி,
மற்றோருக்காக தன்னை செதுக்கி கொண்டார்,,,,
கற்றோரெல்லாம் காசியில் ஒரு சேர, கண்டார் பாலகங்காதரரை,,,
அவர்,
எழுச்சிப் பேச்சில் வீறு கொண்டு,
எட்டுத்திக்கும்
தன் கவி விரவச் செய்தார்,,,
பட்டுப்பூச்சியும் பாவமென
பருத்தியாடை
உடுத்திக் கொண்டார்,,,
உயிர் கொடுமையாகாதென்று உயரிய பண்பும் பரப்பி வந்தார்,,,
ஆணுக்குப் பெண்ணடிமை
யில்லை பாப்பா,
இதில் ஆணவம்
நமக்கென்ன வாப்பா,,,,
வயிற்றிற்கு சோறிடல் வேண்டுமிங்கு வாழும் மனிதர் கெல்லாம்,,,,
தனியொருவனுக்கு உணவில்லை
யெனில் ஜெகத்தினை
யழிப்போம்,,,,
எந்த யுகத்திலும் எவரும் கூறாத
புரட்சி வார்த்தை இன்றும் மக்களின் மனதில் நிலையாய்,,,,
உன் கவிக்கும், உன் விழிக்கும் கர்சனே கலங்கிவிட்டான்,,,,
தமிழ் மொழிப் பற்றால் பங்கிம்சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் பாடல் தமிழ் மொழியில் தந்தாய்,,, ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா,,,, வலிமையற்ற தோளினாய் போ போ போ என்றும் கவி பாடி புரட்சியும் தந்தாய்,,,,,
நீதிபதியாம் சின்கா,,,, தண்டனையும் தந்தான்,,,
அங்கே செத்தவனும் எழுந்திடுவான் பாரதியும், சிதம்பரமும் பாடிவிட்டால், என்றான்,,,, மற்றவனும் சொல்லி விட,
மகா ஆகிவிட, எளிமையான வாழ்வுதனை இறுதி வரை ஏற்று க் கொண்ட நம் பாரதி, தனது கவிதைகளாலும் கட்டுரைகளாலும் ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்த, அவரைக் கண்டு காலன் நடுங்கவில்லை,,,, மகாகவி, அவரோடு வாழ, நாம் கொடுத்து வைக்கவில்லை.,,,
மகாகவி பிறந்த நாளை நினைவு கூர்வோம்,,,,
செந்தமிழ் கவியாலே சேர்ந்து அவர் புகழ் பாடுவோம்!
வாழ்க மகா கவி!!
வளர்க பாரதீ புகழ்!!!
பாலா