மின்னலைப் போல் ஒரு புன்னகை
அவனைக் கன்னிப்போக வைக்கையில்
உன்னிப்பாகப் பார்த்தவன் என்னே அழகென வியக்கிறான்.
பூவைப் போலவள் சிரிக்கிறாள்,
பூவைப் போன்றும் இருக்கிறாள்,
பூவைப் போன்றே மணக்கிறாள்,
பூவாய் அவனைக் கவர்கிறாள்.
அவனை அவனே இழக்கிறான்,
அவளின் நினைவில் நனைகிறான்,
கனவில் கூட நினைக்கிறான்,
காதல் மழையில் குளிக்கிறான்.
உயிராய் அவளை நினைக்கிறான்,
உறவைக்கூட வெறுக்கிறான்,
உண்ணும்போதும் சிரிக்கிறான்,
உறங்கும் போதும் சிலிர்க்கிறான்.
கேட்டால்
அது தான் காதல் என்கிறான்.
தெரியாமல் தான் கேட்கிறேன்
உண்மையில்
அது தான் காதலா?
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*