விழியோடு விழிகலந்து உட்கார ஆசை.
என்னவளை என் மார் சாய்த்து
அவள் கார்குழலைக் கோதிவிட ஆசை.
என்னவளின் விரலுக்கு சொடுக்கெடுத்து
பின் அதை நீவி விட ஆசை.
அவள் பேசும் தமிழழகா, இல்லை
தமிழ் பேசும் அவள் அழகா என்று ஆராய ஆசை.
அவள் சிரிக்கும் போது முகமழகா? இல்லை முகத்திலே பூக்கின்ற சிரிப்பழகா என்று பார்த்து நிற்க ஆசை.
அவள் கண்களில் தெரிகின்ற கனிவழகா இல்லை கனவைச் சுமந்து நிற்கும் கண்களழகா என்று கண்டுகொள்ள ஆசை.
அவள் உதட்டினிலே நான் காணும் துடிப்பழகா இல்லை என் இதயத்தைத் துடிக்கவைக்கும் உதடழகா என்று உணர்ந்து பார்க்க ஆசை.
ஆசையோ ஆசை அளவற்ற ஆசை.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*