கண்பட்டாலே துவண்டுவிடும் ரோஜாவே
மொத்த அழகெல்லாம்
உனதாக்கிக் கொண்டாயே!
அன்பை வெளிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த ஆயுதமே!
இருமனங்களை
ஒன்றாக இணைப்பது உனக்கு சாத்தியமே!முள்ளிடையே நீ பிறந்தாய்என
யாரும் உன்னை வெறுப்பதில்லை!
காரணம் முள்ளுக்குள் பூத்தாலும் முள்ளின் குத்தும் குணம் உனக்கில்லை!
செடிகள் உனக்கு தாய்வீடு!புகுந்த இடமோ எத்தனை உண்டு?
மங்கையரின் கூந்தலிலே
ஆண்பெண் காதலிலே
இருமனம் இணையும் மணவறையிலே
முதலிரவுக் கட்டிலிலே பிள்ளையின் தொட்டிலிலே
சாதனையாளர்களின்
கழுத்தினிலே
ஆலயங்களிலே
இறுதியில்
உயிரற்ற சடலங்களையும்
அழகூட்ட வாசத்தால் கமகமக்க
ரோஜாவே எங்கெங்கும் நீதானே ஆட்சிப் புரிகின்றாய்!ஆனாலும்