இறைவா!
வறுமைக்கு மறுமை வேண்டாம்,,,,
வான் பறக்க கொடிகள் கட்டி வாழும் இந்த பூமியிலே,,,,
நாம் பறக்க, பிறந்து விட்டோம்
பசியும் தந்த கொடுமையிலே,,,,
தேன்கொடுக்கும் சங்கினிலே,ஊண்
காணக் கிடைக்கவில்லை,,,
ஏன் படைத்தாய் இறைவா,,,
நீ, படைத்தும் நடக்கவில்லை,,,!
பூ போன்ற குழந்தையிரண்டு
புரியாத கணவன் இங்கு,,,,
நீ, பார்த்து மறுத்துவிட்டால்,,,
நாங்களெல்லாம் போவதெங்கு,,,,
ஆள் பார்த்து படியளக்கும் ஆண்டவனை உன்னை கேட்க,
நல்ல,
நாள் பார்த்தும்
கிடைக்கவில்லை
நாயகனே கேளாயோ,,,,,
இளம் பருவ வருமையிங்கு இனம் பார்த்து தந்தாயோ,,,,
முதுமையிலும்,
இதுவே என்று மறைந்து நீயும் சென்றாயோ,,,,
கலைமகளே
கால் பிடித்து கதறுகிறேன் கேளாயோ,,,,
என்,
கால் வயிறு நிறைவதற்கு கல்வி ஒன்றை
தாராயோ,,,,
ஏடெடுத்து, படித்திருந்தால்
இந்த நிலை தவழ்ந்திடுமா,,,
என் விதியிங்கு
பாடச் சொல்லி
பகலிரவாய் மகிழ்ந்திடுமா,,,,
வேடிக்கை பார்க்காது வறுமைதனை விரட்டி விடு,,,,
வேண்டும்
நேரம்
உணவுதனை வயிறாற
வழங்கி விடு,,,,
காணிக்கையாய் நான் செய்ய
எனதன்பு இங்கிருக்க,,,,,
படைத்து விட்டு
வாழ வைக்க,,,
உன் உள்ளம்
தான் மறுக்க,,,
அரிதான பிறவிதனை கொடுத்தவன்
நீ,,,
நீ , அறியாத வறுமையில் வாழவைத்தவன்
நீ,,,,
உலகம், தெரியாமல் பிறந்து விட்டேன்
நாயகனே,,,,
ஊண்,
உருக
பாடிவிட்டேன்
காவலனே,,,
இன்னொரு உயிரை என்னைப் போலிங்கு
படைத்து விடாதே,,,
நான்,
படும்பாட்டை மறந்து நீயும,
துணிந்து
விடாதே,,,
இறைவா!
மறந்தும்,,,,
துணிந்து விடாதே,,,
- பாலா