சடசடவென பெய்த மழையில்
மடமடவென முளைத்தன குடைக் காளான்கள்
தபதபவென்று ஓடி சிலர் சாலையோர கடைகளில் நின்றனர்
குடுகுடுவென்று ஓடி சிறுவர்கள் மழையில்
ஆனந்தக் கூத்தாடினார்கள்
சலசலவென தண்ணீர் சாலையில் ஆறாய் பெருக்கெடுத்தது
விறுவிறுவென்று நிலமகள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டால்
அதைக்கண்ட மகிழ்ச்சியில் மழை டக்டக்கென்று நின்றுவிட்டது
தி.பத்மாசினி