Header Ads Widget

Responsive Advertisement

கவலை

குழந்தைகளுக்குப் படிக்கச் சொல்கிறார் என்ற கவலை,

பெற்றோர்களுக்குப் பிள்ளை படிக்காத கவலை.

மணமாகாதவருக்கு மணம் ஆகாத கவலை,

மணமானவருக்கோ அதுவும் ஒரு கவலை.

பிள்ளைகள் குழந்தையென்றால் வளரவில்லையென்ற கவலை,

பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் வளர்ந்துவிட்ட கவலை.

வேலைதேடி அலைகையிலே வேலையில்லாத கவலை,

வேலைக்குச் செல்பவர்க்கோ வேலையிலே கவலை.

வாகனம் இல்லாதவர்க்கு இல்லை என்ற கவலை,

இருப்பவர்க்கோ நேரத்தில் அது உதவாத கவலை.

செல்வம் இல்லாதவர்க்கு வறுமையால் கவலை,

செல்வம் இருப்பவர்க்குச் செல்வத்தால் கவலை.

கவலைகள் நிறைந்தவர்க்கு அவரவர் கவலை,

கவலை இல்லாதவர்க்குப் பிறர் குறித்துக் கவலை.

கவலையை நினைத்திடில் வளர்ந்திடும் கவலை,

கவலையை மறந்திடில்....

கவலையை மறந்திடில்

அழிந்திடும் கவலை.


*சுலீ அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*