Header Ads Widget

Responsive Advertisement

பொடிக்கவிதைகள்



  புதுக்கவிதை

இயற்கை என்னும்
இளைய கன்னி
கவிதை எழுதிட
ஆசை கொண்டாள்!
வாழையின் விரிந்தமடல்மீது
பனிமுத்துகளால்
எழுதினாள் புதுக்கவிதை!

   நவீனப் பூக்கள்

கோடையிலும்
பூக்கும் பூக்கள்
மழையிலும்   மலரும் பூக்கள்!
தேனீக்கள்
மொய்க்காத பூக்கள்!
பலவண்ணத்தில்
தோன்றும் பூக்கள்!
நம்மைக் காக்கும்
குடைகள்!



அச்சந்தவிர்!

வேற்றுமொழிகள்
நம்மண்ணில்
ஊடுருவினாலும்
அச்சந்தவிர் நெஞ்சே!
எத்தனையோ
நதிகள் கலந்தாலுமென்ன
கடல்நீரின் உவர்ப்பு
மாறுமா என்ன?

த.ஹேமாவதி
கோளூர்