'ரெண்டு நாளா என்ன ஆளையே காணோம்?'
கேள்வியோடு பார்த்தார் ஒருவர்,
'வெளியூர் சென்றிருப்பான், நேற்றுதான் வந்திருப்பான்'
சிரிப்புடனே சொன்னார் இன்னொருவர்,
'ஒடம்பு கிடம்பு சரியில்லையோ?
மருந்து கிருந்து சாப்டீங்களோ?'
கரிசனம் காட்டினார் மற்றொருவர்.
புன்னகைத்தவாறே கடைக்காரர் தந்த தேனீர்
இனிப்பைக் கொடுத்தது நாவிற்கு,
இதமாய் இருந்தது மனதிற்கு.
மூன்று ரூபாய் கொடுத்து குடித்த தேனீர் தந்த சுவை இன்று கூட நினைவில் மறையாமல் இருக்கிறது.
முப்பது ரூபாய் கொடுத்து குளிரறையில் குடித்த தேனீர் சூடாய்த்தான் இருக்கிறது,
சுவையாய்த்தான் தெரியவில்லை.
இத்துப்போன கடையினிலே குடித்தபோது கிடைத்த சுவை
ஆடம்பர விடுதியிலே குடிக்கும்போது கிடைக்கவில்லை.
சுவையைக் கொடுப்பது பணமா? பாசமா?
என்கின்ற உண்மையிங்கு பலருக்குத் தெரியவில்லை.
ஏனோ தெரியவில்லை, மூன்று ரூபாய் சுவைக்காய் ஏங்குகிறது என் மனசு.
சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.