உன் சிறகுகளை
நீயாக
விரிக்காதவரை...
போகும்திசை
தெரியப்போவதில்லை!!!!
உன் கால்களை
நீயாக
நனைக்காத வரை...
நீரின் ஆழம்
தெரியப்போவதில்லை!!!
உன்மௌனத்தை
நீயாக
கலைக்காதவரை..
காவியங்கள்
காட்சிக்கு வரப்போவதில்லை!!!!!
சாலையில்
நீயாக
நடக்காதவரை.....
பாதையில் தடங்கள்
விரிவடைவதில்லை!!!!
வாழ்க்கையை
நீயாக
படிக்காதவரை.....
வாழும் முறைமை
தெரியப்போவதில்லை....!!!
ஆகவே மனமே...
எழு! !விழு!!
என்றும் வெற்றி....
உன்
வாசல்கதவைத்
தட்டட்டும்
வத்சலா