என் கையில் பிடிக்க ஆசை
ஆனால் முடியவில்லை
விரட்டி விரட்டி சென்றாலும் முடியவில்லை
துரத்திச் சென்றாலும் பிடிக்க முடியவில்லை
என்னைத் தொட்டுச் செல்கிறான்
என்னை உரசிச் செல்கிறான்
அவன் கோபமாய் இருந்தால்
என் கன்னத்தில் அறையும் விடுகிறான்
வாரி இழுத்துக் கட்டிய முடியை கலைக்க வருகிறான்
அப்போதும் என் கையால் பிடிக்க முடியவில்லை
இதுவரையில்
அவனை நான்
கண்ணால் காணவும் முடியவில்லை
கையாலும் பிடிக்க
முடியவுமில்லை
நான் உயிர் வாழ்வதற்கும் அவன் தான் காரணம்
அவனில்லையென்றால் நான் பிணம் தான்
யாரென்று புரிகிறதா
அவன் தான் காற்று
தி.பத்மாசினி