களைத்துப் போன
மரஞ்செடிகள்!
சோர்ந்துப் போன
மண்வளங்கள்!
காய்ந்துப் போன
நீர்நிலைகள்!
ஓய்ந்துப் போன
தொழில்வளங்கள்!
வெப்பத்தில்
ஆழ்ந்த தேசங்கள்!
வாட்டத்தில்
நடப்பட்ட நாற்றுகள்!
'சோ' வெனக்
கொட்டிய பெருமழையில்
திடீரெனக் கிட்டிய
புத்தாக்கப் பயிற்சியில்
யாவும் மாறின!
மகிழ்ச்சியில் ஆழ்ந்தன!
த.ஹேமாவதி
கோளூர்