அன்போடு
பேசும் சொற்கள்
வாசம்வீசும்
மலருக்கு ஒப்பாகும்!
சினத்தோடு
பேசும் சொற்கள்
மலரல்ல முள்ளேயாகும்!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
சொற்கள் யாவும்
கண்ணைப் பறிக்கும் காகிதப் பூக்களாகும்!
தேனும் மணமும்
கொண்ட மலர்களைத் தேடி
நாடும் வண்டினம்போல்
நாமும் நாளும்
அன்பென்ற மணம்வீச
மெய்யென்ற தேன்நிரம்பிய
வாசமான சொற்களையே
பேசுவோம்!
அனைவரையும்
பேச்சாலே
நம்மிடம் ஈர்ப்போம்!
த.ஹேமாவதி
கோளூர்