வயதுக்கேற்ற பக்குவம் சிலருக்கு!
வயதை மீறிய
பக்குவம் சிலருக்கு!
வயதானாலும்
பக்குவமில்லை சிலருக்கு!
பக்குவம் என்பதே என்னவென்று தெரியாது சிலருக்கு!
பக்குவம் இருந்தால்
விட்டுக்கொடுத்தல்
இயல்பாய் வரும்!
விட்டுக் கொடுத்தால் மோதல் யாவும்
சாதல் ஆகி ஆங்கே
காதல் (அன்பு)மலரும்!
காதலின் மிகுதியால் மானிடர்
வாழ்வில் ஆனந்தம் ஓங்கிடும்!
த.ஹேமாவதி
கோளூர்