வானவில்லை கையில் பிடித்து
அதிலிருக்கும் வண்ணம் எடுத்து
வாசலில் கோலமிட ஆசை
காற்றை கையால் பிடித்து
கயிறாய் திரிக்க ஆசை
மேகத்தை எல்லாம் எடுத்து
மெத்தைகள் தைக்க ஆசை
நட்சத்திரங்களை சேர்த்து எடுத்து
சரங்கள் தொடுக்க ஆசை
தொடுத்த சரங்களை எல்லாம்
இறைவனுக்கு சூட்ட ஆசை
கண்ணில் தெரியும் காட்சிகளெல்லாம்
கவிதையாய் வடிக்க ஆசை
வண்ணத்துப்பூச்சியின் வண்ணம் எடுத்து
உடலில் பூசிக்கொள்ள ஆசை
சிலந்தியின் இழையை எடுத்து
ஆடைகள் தைக்க ஆசை
ஆசை ஆசை பேராசை
இவையெல்லாம் என் நிராசை
தி.பத்மாசினி